பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

புகையிலை புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம்புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போல் ஆக்கியிருக்கும்
  • வளர்ந்த புழுக்கள் இலைகள் அனைத்தையும் தின்று அழித்துவிடும்

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: முட்டையானது சந்தன பழுப்பு நிறத்தில் குவியல்களாக காணப்படும்
  • புழு: இளம் பச்சை நிறத்திலும் கருமை நிறக்கோடுகள் உடலின் மேற்பரப்பில் காணப்படும்
  • அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் முன் இறக்கை பழுப்பு நிறத்தில் இருக்கும். வெள்ளை நிற கோடுகள் இறக்கையில் குறுக்கே காணப்படும். பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இறக்கையின் ஓரத்தில் பழுப்புநிற திட்டுகள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • கோடை உழவு செய்து மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுப்பளை வெளிகொணர்ந்து அழிக்கவும்
  • வரப்பு மற்றும் வாய்க்காலைச் சுற்றிலும் ஆமணக்கு செடியை நடுவதன் மூலம் சிறந்த பொறி பறிரி ஆக செயல்படுகிறது
  • வயலில் தண்ணீர் தேக்கும் போது உறக்க நிலையில் இருக்கும் புழுவானது அழிக்கப்படுகிறது
  • ஹெக்டேருக்கு 1 விளக்குபொறி வைக்க வேண்டும்
  • இனக்கவர்ச்சி பொறி (பெருடின் S.L) @15/ஹக்கடர் என்ற வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்தியிலுத்து அழிக்கலாம்
  • ஆமணக்கு மற்றும் தக்காளி செடியில் உள்ள முட்டை குவியல்களை சேகரித்து அழிக்கவும்
  • வளர்ந்த புழுக்களை கைகலால் சேகரித்து அழிக்கவும்
  • ஸ்போடாப்ரா லிட்டுரா நியுக்ளியே பாலிகேட்டிரோசிஸ் வைரஸ் @ 1.5x10¹² POBS/ஹக்கடர் + 2.5 கி.கி பனங்கட்டி +0.1% ஒட்டும் திரவம் என்ற வீதம் கலந்து தெளிக்கவும்.
  • நச்சு உணவு கிராம் நன்றாக கலக்கி மாலை நேரத்தில் வயிலில் வைப்பதன் மூலம்.
  • நச்சுக்கவர்ச்சி உணவு:  ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ அரிசித் தவிடு + 500 கிராம் வெல்லம் + 500 கிராம் கார்பரில் 50 சத 3லி தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
  • குளோரோபைரிபாஸ் 20 EC 2 லி/ஹக்கடர் அல்லது டைகுளோர்வாஸ் 76 WSC 1 லி/ஹக்கடர் என்ற வீதம் தெளிக்கலாம்.
புழுவின் சேதம் 
இலைகளை அரித்தல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016