பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
உருளைக்கிழங்கு துளைப்பான் : தோரிமோயா ஒப்பர்குலெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இப்பூச்சி கிழங்குகளை வயல்களிலும், சேமிப்புக் கிடங்கில் தாக்குகிறது.
  • இலைகள், இளம்தண்டு மற்றும் கிழங்குகளை துளைத்துச் சென்று சேதம் விளைவிக்கும்.
  • கிழங்குகளில் கண் பகுதிகளில் நூலாம்படைகளை உருவாக்கி சேதப்படுத்தும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: பெண் அந்துப்பூச்சி இலையின் அடிபரப்பு மற்றும் கிழங்குகளின் மீது முட்டை குவியல்களை இடும்
  • புழு: மஞ்சள் நிறத்துடன் கரும்பழுப்பு நிறத்தலையுடன் இருக்கும்
  • கூட்டுப்புழு: இலை மற்றும் மண் கட்டிகளில் பட்டுக்கூட்டினில் கூட்டுப்புழு இருக்கும்
  • பூச்சி:  அந்துப்பூச்சி கரும்பழுப்பு நிறத்துடன் இருக்கும். முன் இறகுக்குகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்துடனும் பின் இறக்கைகள் அழுக்கடைந்த வெண்ணிறத்திலும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • தரமான கிழங்குகளை தேர்வு செய்து நடவும்
  • மேற்பரப்பில் கிழங்குகள் நடவுசெய்வதை தவிர்க்கவும்
  • கிழங்குகளை 10 - 15 செ.மீ ஆழத்தில் நடவும்
  • இனக்கவர்ச்சிப்பொறி ஹெக்டேருக்கு 15 வைக்கவும்
  • வயல்களில் புச்சி தாக்கிய கிழங்குகளை சேகரித்து அமிக்கவும்
  • அறுவடை செய்த கிழங்குகளை வயல்களில் இரவு நேரங்களில் விட்டுவைக்க கூடாது
  • மிளகாய், வெங்காயம் மற்றும் பட்டானியை ஊடுப்பயிராக பயிரிடவும்
  • நடவு செய்து 60 நாள் கழித்து கிழங்குகளுக்கு மண் அணைக்கவும். இதன் மூலம் தாய் அந்துப்புச்சி கிழங்குகளின் மீது முட்டையிடுவதை தவிர்க்கலாம்
  • சேப்புக் கிடங்கில் கிழங்கின் மேற்பரப்பில் லேண்டானா மற்றும் யுபேட்டோரியம் செடிகள், கிளைகளைக் கொண்டு மூடுவதால் பூச்சியானது கிழங்கில் முட்டையிடாமல் விரட்டியடிக்கப்படுகிறது
  • முட்டை-புழு ஒட்டுண்ணியான செலேனஸ் பிளாக்பானியை ஹெக்டேருக்கு 30,000 அளவு இருமுறை நடவு செய்து 40 மற்றும் 70 நாட்கள் கழித்து விடவும்
  • வேப்பங்கொட்டை வடிநீர் @ 5 சதம் அல்லது குயினல்ஃபாஸ் @2 மி.லி/லிட்டர் தெளிக்கவும்
  • பெசில்லஸ் துருன்ஜியென்ஸிஸ் @1 கிராம்/ஹெக்டேர் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கலாம்
http://www.agritech.tnau.ac.in/crop_protection/crop_prot_crop_insect_veg_potato_clip_image007.jpg http://www.agritech.tnau.ac.in/crop_protection/crop_prot_crop_insect_veg_potato_clip_image006.jpg http://www.agritech.tnau.ac.in/crop_protection/crop_prot_crop_insect_veg_potato_clip_image004.jpg
Potato
புழு
Potato
பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016