பயிர் பாதுகாப்பு :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பழத்துளைப்பான்: கோனோகீத்தஸ் பங்டிபெரேலிஸ்
அறிகுறிகள்
  • இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும்.
  • பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
  • முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விபரம்

  • புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும் முன் மார்பு திட்டுடன் காணப்படும்.
  • பூச்சி : மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற புள்ளிகள் இறக்கை, மற்றும் உடல் முழுவதும் காணப்படும்.

கட்டுப்பாடு

  • சேதமடைந்த பழங்களை சேகரித்து, அழித்தல்.
  • சாகுபடியை தத்மாக மேற்கொள்ள வேண்டும்.
  • விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைத்தல்.
  • மாலத்தியான் 50கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30கிகி 0.06% பூக்கும் சமயம், பழங்கள் உருவாகும் சமயம் தெளித்தல்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015