| பயிர் பாதுகாப்பு  :: மாதுளை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             அனார்  வண்ணத்துப்பூச்சி: டியோடிரிக்ஸ் 
                
              
                  
                    அறிகுறிகள்
                      
                        
                          - இளம்  பழங்களை புழுக்கள் துளைக்கும்.
 
                          - பழங்களின்  உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
 
                          - பழங்கள்  அழுகும், உதிர்ந்துவிடும்
 
                         
                       
                      பூச்சியின்  விபரம் 
                      
                        
                          - புழு  – அடர் பழுப்பு நிறத்தில், சிறியதாக, தடித்து, சிறிய உரோமங்களால் சூழப்பட்டிருக்கும்.
 
                          - பூச்சி  – நீலம் கலந்த பழுப்பு நிற வண்ணத்துப் பூச்சி
 
                          - பெண்  பூச்சி – முன்னிறக்கையில் ‘V’ வடிவ திட்டு காணப்படும்.
 
                         
                        கட்டுப்பாடு 
                        
                          
                            - சேதமடைந்த  பழங்களை சேகரித்து அழித்தல்
 
                            - சாகுபடியை  சுத்தமாக மேற்கொள்ளுதல்
 
                            - நோய்  தாங்கிக் கொள்ளக் கூடிய இரகங்களை பயிரிடுதல்.
 
                            - பொருளாதார  சேதநிலை – 5 முட்டைகள்/செடி
 
                            - பழங்களை  பாலித்தீன் பைகளில் கட்டி மூடிவிடவேண்டும்.
 
                            - விளக்குப்  பொறி 1/ஹெக்டர்  என்ற அளவில் அமைக்கலாம்.
 
                            - மாலத்தியான்  50 கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30 கிகி  0.06%  பூக்கள் உருவாகும் போது, பழங்கள் உருவாகும் போதும் தெளிக்க வேண்டும்.
 
                            - பூக்கள்  நிலையில், வேப்பங்கொட்டை சாறு 5% (அ) வேம்பு கலந்த கரைசல் 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க  வேண்டும்.
 
                            - டைமெத்தோயேட் 30 கிகி 1.5 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
 
                            - டிரைக்கோகிராம்மா  கைலோனிஸ் 1 லட்சம் /ஏக்கர் என்ற அளவில் வயலில் வெளிவிடுதல்.
 
                           
                         
  | 
                      
                     
  | 
                   
                  | 
           
         
  |