பயிர் பாதுகாப்பு ::மா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பொதுப்பெயர்: மாதுளை

அறிவியல் பெயர்: புனிக்கா க்ரேனட்டம்

குடும்பம்: புனியேசியே

மாதுளைப் பயிரின் முக்கியமான பூச்சிகள் :

அ. பழத் துளைப்பான்கள் :
ஆ.சாறு உறிஞ்சும் பூச்சிகள் :

அ. பழத் துளைப்பான்கள் :

1. அனார்  வண்ணத்துப்பூச்சி, டியோடிரிக்ஸ்

அறிகுறிகள்

  • இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும்.
  • பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
  • பழங்கள் அழுகும், உதிர்ந்துவிடும்

பூச்சியின் விபரம்

  • புழு – அடர் பழுப்பு நிறத்தில், சிறியதாக, தடித்து, சிறிய உரோமங்களால் சூழப்பட்டிருக்கும்.
  • பூச்சி – நீலம் கலந்த பழுப்பு நிற வண்ணத்துப் பூச்சி
  • பெண் பூச்சி – முன்னிறக்கையில் ‘V’ வடிவ திட்டு காணப்படும்.

கட்டுப்பாடு

  • சேதமடைந்த பழங்களை சேகரித்து அழித்தல்
  • சாகுபடியை சுத்தமாக மேற்கொள்ளுதல்
  • நோய் தாங்கிக் கொள்ளக் கூடிய இரகங்களை பயிரிடுதல்.
  • பொருளாதார சேதநிலை – 5 முட்டைகள்/செடி
  • பழங்களை பாலித்தீன் பைகளில் கட்டி மூடிவிடவேண்டும்.
  • விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைக்கலாம்.
  • மாலத்தியான் 50 கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30 கிகி 0.06% பூக்கள் உருவாகும் போது, பழங்கள் உருவாகும் போதும் தெளிக்க வேண்டும்.
  • பூக்கள் நிலையில், வேப்பங்கொட்டை சாறு 5% (அ) வேம்பு கலந்த கரைசல் 2 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • டைமெத்தோயேட் 30 கிகி 1.5 மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
  • டிரைக்கோகிராம்மா கைலோனிஸ் 1 லட்சம் /ஏக்கர் என்ற அளவில் வயலில் வெளிவிடுதல்.

மேலே

2. பழத்துளைப்பான், கோனோகீத்தஸ் பங்டிபெரேலிஸ்

அறிகுறிகள் :

  • இளம் பழங்களை புழுக்கள் துளைக்கும்.
  • பழங்களின் உள்ளே உள்ளவற்றை உண்ணும்.
  • முதிராமலேயே வாடி, உதிர்ந்துவிடும்.

பூச்சியின் விபரம் :

  • புழு : இளம் பச்சை நிறத்தில், இளஞ்சிவப்பு புள்ளியுடன், நுண்ணிய ரோமங்களுடன், அடர் நிற தலை மற்றும் முன் மார்பு திட்டுடன் காணப்படும்.
  • பூச்சி : மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற புள்ளிகள் இறக்கை, மற்றும் உடல் முழுவதும் காணப்படும்.

கட்டுப்பாடு :

  • சேதமடைந்த பழங்களை சேகரித்து, அழித்தல்.
  • சாகுபடியை தத்மாக மேற்கொள்ள வேண்டும்.
  • விளக்குப் பொறி 1/ஹெக்டர் என்ற அளவில் அமைத்தல்.
  • மாலத்தியான் 50கிகி 0.1% (அ) டைமெத்தோயேட் 30கிகி 0.06% பூக்கும் சமயம், பழங்கள் உருவாகும் சமயம் தெளித்தல்.

மேலே

ஆ.சாறு உறிஞ்சும் பூச்சிகள் :

3. வாலுடைய மாவுப்பூச்சி : பெர்சியா விர்கேட்டா 

அறிகுறிகள்:

  • பழங்கள் முதிர்வதற்கு முன் உதிர்ந்து விடும்.

பூச்சியின் விபரம்:

  • இளம் பூச்சி : மஞ்சள் நிறம் முதல் இளம் வெள்ளை நிறம் வரை இருக்கும்.
  • பூச்சி – பெண் பூச்சி, இறக்கை இல்லாமல், நீளமாக, தட்டையாக, வெள்ளை நிற மெழுகு சுரப்பு சூழ்ந்து, உடலின் முடிவில் 2 மெழுகு போன்ற இழைகள் காணப்படும்.

கட்டுப்பாடு :

  • சேதமடைந்த பயிர் பகுதிகளை சேகரித்து, அழித்தல்.
  • மலற்ற ஓம்புயிரிகளை அகற்றுதல்.
  • டிரைஅசோபாஸ் 2மிலி+வேப்பஎண்ணெய் 5மிலி/லிட்டர், பேசலோன் 35 கிகி 1.5மிலி கலந்து தெளித்தல்.
  • மீத்தைல் டெமட்டான் 25 கிகி (அ) மோனோகுரோட்டாபாஸ் 36 wsc 2மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • டைகுளோர்வாஸ் 76 wsc 1 மிலி/லிட்டர்+ மண்எண்ணெய் சோப் 25 கி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்.
  • கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி வண்டுகள் 10/மரம் என்ற அளவில் வெளியிடுதல்.

மேலே

4. வெள்ளை ஈ

அறிகுறிகள் :

  • இளம் பூச்சிகள், பூச்சிகள் இலைகளின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • தேன் சுரப்பு, வழிவது ஏற்படுவதால், கரும் புகை பூஞ்சாண் வளர்ச்சி தோன்றுகின்றது.
  • இலைகள் மஞ்சளாதல்.
  • சேதமடைந்த இலைகள் தொங்குகின்றன.

பூச்சியின் விபரம் :

  • இளம் பூச்சி – சிறியதாக, உடலின் ஓரங்களில் கண்ணாடி போன்ற மெழுகு குச்சிகள் காணப்படும்.
  • பூச்சி – வெள்ளை நிற பொடி போன்று, காலை வேளைகளில் அதிக நடமாட்டத்துடன் காணப்படும்.

கட்டுப்பாடு :

  • வயல் சுகாதாரம்
  • ஓம்புயிரி செடிகளை அகற்றுதல்
  • மஞ்சள் ஒட்டுப் பொறிகளை அமைத்தல்
  • வேப்ப எண்ணெய் 3% (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5% தெளித்தல்
  • இரை விழுங்கிகளான காக்ஸி நெல்லிட், கிரிப்டோலேமியஸ் மான்டோஜெர்ரி, இறகு இறக்கை பூச்சி, மல்லாடா அஸ்டர் – ஐ வயலில் விடுதல்.
  • ஒட்டுண்ணிகளான என்கார்சியா ஹேஸ்டரிஸிஸ், எ.குவாடெல்லுபே.

மேலே

5.அசுவினி, ஏபிஸ் புனிகே

அறிகுறிகள் :

  • இளம் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் இலைகள், கிளைகள், பழங்களின் சாற்றை உறிஞ்சுகின்றன.
  • இலைகள் மஞ்சளாதல்
  • நுனியில் உள்ள கிளைகள் வாடுதல்

பூச்சியின் விபரம் :

  • இளம் பச்சை நிறத்தில், இறக்கை மற்றும் இறக்கை இல்லாமல் காணப்படும்.

கட்டுப்பாடு :

  • சேதமடைந்த பயிர் பகுதிகளை சேகரித்து, அழித்தல்
  • மஞ்சள் ஒட்டுப் பொறி பயன்படுத்துதல்
  • டைமெத்தோயேட் 25 கிகி (அ) மீத்தைல் டெமட்டான் 30 கிகி 2மிலி/லிட்டர் என்ற அளவிலி தெளித்தல்.
  • கிரைசோபெரிலா கார்னியா 15/பூக்கும் கிளையில் 4 முறை 10 நாட்கள் இடைவெளியில் ஏப்ரல் மாதத்திலிருந்து பூக்கள் உருவாகும் பொழுது வெளிவிட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013