பயிர் பாதுகாப்பு :: பிளம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பீச் துளைப்பான்: ஸ்பீனோப்டிரா லேப்பர்டே            

அறிகுறிகள்:

  • இலைகளை உண்ணும்
  • இளம் புழுக்கள் பட்டையைத் துடைத்து உள்ளே ஒழுங்கற்ற கூடுகளை உண்டு பண்ணுகின்றன.
  • பட்டையில் துளை ஏற்படுத்திய இடத்தில் புழுக்களின் கழிவுகள் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • சேதமடைந்த கிளைகள் தண்டுகளை சேகரித்து அழித்தல்.
  • அடிமரத்தை தார்பையில் 50wp 0.2% கொண்டு தடவுதல்
  • மாலத்தியான் 0.1% தெளித்தல்
  • இயற்கை எதிரியான சாம்பல் வயல் எறும்பு, போர்மிகா ஏரெட்டா சால்சட் குளவிகள், கோப்பிடோசோமா வேர்கோனிஸ், ஹைப்பர்டிலஸ் லிவிடஸ் தோட்டத்தில் வெளிவிடுதல்
  • பேசில்லஸ் துருஜின்ஜியஸஸ்ஸை, புழு முதலில் தோன்றியவுடன் சுரங்கப்பாதை அமைப்பதற்கு முன் கிளைகள் மொட்டு பழங்களில் தெளித்தல்
  • பின்வரும் ஏதாவது ஒரு பூச்சிக் கொல்லியை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

தெளிக்கும் காலம்

பூச்சிக் கொள்ளிகள்

இளஞ்சிவப்பு (பீச்)

பாஸ்பேட் (50%wp)

இதழ்கள் உதிருதல் (பீச்)

தியோடான், கித்தியான், ஸினிப்பர், இம்டான்

இதழ்கள் உதிருதல் (ஏப்ரிகாட்)

டெல்டா மெத்தரின் (டெனிஸ் 5இசி)

உமி உதிருதல் (பீச்)

தியோடான், கித்தியான், ஸினிப்பர், இம்டான்

கோடைக்காலம் (பீச், ஏப்ரிகாட்)

தியோடான், கித்தியான், ஸினிப்பர், இம்டான்

ஆதாரம்:

www.ipm.ucdavin.edu
www.apidweb.com
ag.arizona.edu

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015