பயிர் பாதுகாப்பு :: பிளம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சேன் ஜோஸ் செதில் பூச்சி: குவாடிராஸ் மிடியோடஸ் பெர்னிசியோசஸ்

அறிகுறிகள்:

  • பழங்களின் மீது ஊதா நிற நிற மாற்றம் ஏற்படும். பழங்களை சிந்தைப்படுத்தி தகுதியற்றதாகிறது.
  • கிளைகளை சேதமடைய செய்வதால் அதன் ஆயுள் குறைந்து முடிவில் இளம் மரங்கள் (அ) கிளைகள் மடிந்துவிடும்.
  • பழங்களில் துளைகள் ஏற்படுவதால் பார்பதற்கு ஒழுங்கற்ற தோற்றமாக காணப்படுகிறது.

பூச்சியின் விவரம்:

  • பெண்பூச்சிகள் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில் சற்று குவிந்த நிலையில் நடுவில் தூக்கியவாறும் காணப்படும்
  • ஆண்பூச்சிகள் சிறியதாக நீளமான வடிவத்தில் இருக்கும்

கட்டுப்பாடு:

  • நோயற்ற தண்டுகளை பயிரிட தேர்ந்தெடுத்தல்
  • பாசலோன் 0.5% (அ) பெனிட்ஆடாதியான் 0.05%, மீத்தைல் டெமட்டான் 0.025% தெளித்தல்
  • காக்ஸி ஹெல்லிட் இரைவிமுங்கிகளான கைலோகோரஸ் ஹைக்ரிடிஸ் ஒட்டண்ணியாக என்கார்சியா பெரிமியோசி தோட்டத்தில் வெளிவிடுதல்

 

தண்டின் மீது ஊதா நிற மாற்றம்  
பழங்களின் மீது ஊதாநிற மாற்றம்  
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015