மேல்  தண்டுத் துளைப்பான்: லாஸ்பயிரிஸியா  ஹெமிடாக்ஸா 
                சேதத்தின்  அறிகுறிகள்: 
              
                
                  - புழுக்கள் இளம் நுண் குருத்துக்களில்       துளையிட்டு உள்ளே சென்று தண்டின் உள்ளிருக்கும் திசுக்களை சாப்பிடுவதால் அவைக்       கருகி, அழுகி விடும்.
 
                  - நீர்த்தண்டுகள் அதிகமுள்ள மாதங்களான       ஜீலை முதல் அக்டோபர் வரை இப்பூச்சியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
 
                 
               
              பூச்சியின்  விபரம்: 
              
                - புழு: சாம்பல் கலந்த பச்சை நிறத்தில்       இருக்கும் கூட்டுப்புழு தண்டுகளின் துளைகளில் இருக்கும்.
 
                - சிறிய  அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின் முன் இறக்கை       முன் பாதி கருப்பாகவும் பின் பாதி சிவப்பாகவும் இருக்கும்.
 
                - பின் இறக்கை சாம்பல் நிறத்தில்       இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                
                  - இளம் துளிர்களின் மீது குவினால்பாஸ் 0.05 சதவிகிதம் தெளிக்கவும். பூச்சிகளின் தாக்கத்தைக் குறைக்க       ஒரு மாத இடைவெளியில் (ஜீலை, அக்டோபர்) மீண்டும் பூச்சிக்கொல்லி தெளிக்கவும்.
 
                 
  | 
             
               
               |