பொள்ளு  வண்டு: லாங்கிட்டாஸிஸ் நிகிரிபினிஸ்  
              சேதத்தின்  அறிகுறிகள்: 
               
              
                
                  - தண்டு  மற்றும் காய்களில்: வண்டினப் புழு வளரும் நுனி, இளம்       தளிர், இலைக்காம்பு, கதிர் மற்றும் காய்களை துளையிட்டு சாப்பிடும்.
 
                  - இளம் தண்டுகளில் துளையிடுவதால்       தண்டுப்பகுதி காய்ந்துவிடுகிறது.
 
                  - வண்டினப் புழுக்களால் தாக்கப்பட்ட       கதிர்கள் கருப்பாக மாறிப் பிறகு அழுகி கதிர்கள் உதிரிவிடும்.
 
                  - வண்டினப் புழுக்கள் காய்களை துளையிட்டு       சென்று உள்ளிருக்கும் திசுக்களைச் சாப்பிடும்.
 
                  - காய்ந்த காய்களில் சிறுதுளைகள்       காணப்படும்.
 
                  - புழுக்கள் காய்களை துளையிடுவதால்       காய்கள் கருகிக் காய்ந்து விடுகின்றன.
 
                  - தாக்கப்பட்ட காய்கள் பொட்டாக அல்லது       பொக்கு இருக்கும் அழுத்தியவுடன் உடைந்து விடும்.
 
                  - பொட்டாக உள்ளக் காய்களை பொள்ளுக்       காய்கள் எனப்படும்.
 
                  - இலைப்பகுதியில்:
 
                  - இளம் தளிர்களை வண்டுகள் சாப்பிடும்.
 
                  - இலையின் மேற்பரப்பில் ஒழுங்கற்ற       துளைகள் இருக்கும்.
 
                  - முதிர்ந்த இலையில், வண்டுகள், இலையின்       மேற்பரப்பில் இருக்கும் திசுக்களை சுரண்டி சாப்பிடும்.
 
                 
               
              பூச்சியின் விபரம்:
              
                - முட்டை : பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும் தாய் வண்டுகள் வளரும் மொட்டு, இலை, இலைக்காம்பு, கதிர் மற்றும் இளம் காய்களில் துளையிட்டுத் தனித்தனியே முட்டையிடும்.
 
                - வண்டினப்புழு : இளம் மஞ்சளாக இருக்கும்
 
                - கூட்டுப்புழு: கூட்டுப்புழு மண்கூட்டில் இருக்கும்.
 
                - வண்டு : வண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் பளபளப்பாக  இருக்கும். பின்னங்கால்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்.
 
               
              
              கட்டுப்படுத்தும்  முறைகள்: 
              
                
                  - தோட்டத்தின் நிழல் உண்டாவதை ஒழுங்குப்படுத்துவதன்       மூலம் பூச்சிகளின் எண்ணிக்கைக் குறைக்கலாம்.
 
                  - கொடிகளின் அடிப்பகுதியில் இருக்கும்       மண்ணை உழவும
 
                  - குவினால்ஃபாஸ்       0.05 சதம் கரைசலை ஜீலை மற்றும் அக்டோபரில் பயிரில் தெளிக்கவும் மற்றும் நீம்       கோல்டு 0.06 சதவிகிதம் (வேம்பு வகைச் சார்ந்த பூச்சிக்கொல்லியை ஆகஸ்டு, செப்டம்பர்       தெளிக்கவும்)
 
                   
                 
               
             
             | 
              
               |