| பயிர் பாதுகாப்பு :: பேரிபழம் பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            | நெருப்பு  அழுகல் நோய்: எர்வினியா எமிலோவோரா
               அறிகுறிகள்: 
              
                
                  - குளிர் காலத்தின் போது, நுண்ணுயிரி  போன்று இந்நோய் தோன்றும். குச்சிகளின் விளிம்பில் பிளவு ஏற்படும் மற்றும் தண்டுகுளில்  முன்பே பாதிப்படைந்திருக்கும்
 
                  - திசுகளை தாக்கிய நுண்ணுயிரி, சிறிது  சிறிதாக பிளவு ஏற்பட்ட தண்டுகளில் நோய் பரவ செய்யும்
 
                  - இளவேனிற் காலங்களில், நுண்ணுயிரி வளர்ச்சியை  அதிகப்படுத்தும், அதே சமயம் வளர்ச்சியின் நிலையை தொடங்கும். நுண்ணுயிரியின் அதிகரிப்பினால்  பிளவு ஏற்பட்ட விளிம்புகளில் நீர் வடியும்
 
                  - இந்நீர் வடிவதினால் பூச்சிகளை கவரச்  செய்கிறது மற்றும் இவைகளை பூக்கின்ற பூக்களுக்கும் பூச்சிகள் எடுத்து செல்கின்றன. மழைநீரின்  மூலமும் நுண்ணுயிரி தெளிக்க செய்து நோயை பரவ செய்கின்றது
 
                  - நுண்ணுயிரி பூக்களை தாக்கியதும், 7 முதல்  10 நாட்களிலேயே பூக்கள் அழுகிவிடும். பூக்களை பாதித்தப் பின்பு நுண்ணுயிரி பழத் தண்டுகளில்  நோய் பரவச் செய்து மற்றும் இறுதியில் குச்சிகளைத் தாக்கும்
 
                  - நீர் கோர்த்தலின் தொடர்ச்சியினால்,  நோயின் இரண்டாம் நிலையாக தாக்கக்கூடும். ஈரப்பதம் அதிகரிப்பினால், நுண்ணுயிரி இலைகளிலும்  இந்நோய் பாதிக்கப்படும்
 
                 
                கட்டுப்பாடு: 
                
                  - எதிர்ப்பாற்றல் மிக்க வகைகள்: கேய்வர்,  ஒரியன்ட், கர்பேர் அல்லது டவ்லஸ்
 
                  - உரத்தை சரிவிகித அளவில் பராமரிக்க வேண்டும்.  நைட்ரஜன்் அதிகளவின் உபயோகிக்கக் கூடாது
 
                  - செயலற்ற காலங்களில் வேண்டாத செடிகளை  அகற்றிவிட வேண்டும். கோடைக்காலங்களில் வேண்டாத செடிகளை கவாத்து செய்ய வேண்டும். இல்லையெனில்  நோய் வளர்ச்சியைக் கூடும்
 
                  - குளிர்காலங்களில் செடியின் விழும்பில்  ஏற்படும் நுண்ணுயிரிகளை அகற்றிவிட வேண்டும். நோய் தாக்கப்பட்ட செடியினை 8 – 12 அங்குள  அளவில் அகற்றிவிட வேண்டும்.
 
                  - பூக்கள் பூர்ப்பதற்கு முன்பும், பின்பும்  ஐந்து நாட்கள் இடைவேளிவிட்டு நுண்ணுயிர்க் கொல்லியை தெளிக்கவும்.
 
                  - பழத்தோட்டங்களில் ஏற்படும் கடும் மழையினாலும்  அல்லது ஆலங்கட்டி மழையினால் ஏற்படும் சேததத்தின் போது நுண்ணுயிரிக் கொல்லியினை தெளிக்கவும்.
 
                 
  | 
             
               
             
               | 
           
       
  |