| பயிர் பாதுகாப்பு  :: பேரிக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             தண்டு  துளைப்பான்: சாகைட்ராசஸ்  மலபேரிக்கஸ்
            
 சேதத்தின்  அறிகுறி 
  - அடித்தண்டுப்  பகுதியில் துளையிருக்கும், கழிவுப்பொருட்கள் அதன் கீழே கொட்டிக் கிடக்கும். மரங்கள்  வாடும்.
  
  பூச்சி 
    - புழு  தடிமனாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். அந்துப்பூச்சி வெண் பழுப்பு நிறமாக பெரியதாகக்  காணப்படும்.
 
  | 
             malabaricus .jpg) 
  | 
           
          
            தடுப்பு  
              
                - சேதமடைந்த (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றி விட வேண்டும். 
 
                - பூச்சி எதிர்ப்புத்திறனுடைய மர ரகங்களை பயிரிட வேண்டும் (நீலம், கிமாயூதீன்). 
 
                - வண்டு உண்ணக்கூடிய மாற்று பயிர்வகைகளை அகற்ற வேண்டும். 
 
                - வண்ணம் பூசுதல் 20 கி காப்பரில் பவுடரை 1 லி தண்ணீரில் கலந்து மரத்தின்   அடியிலிருந்து 3 அடி உயரத்தில் வண்ணம் பூச வேண்டும். இதனால் பெண் வண்டின்   முட்டையிடும் தன்மை தடுக்கப்படுகிறது. 
 
                - சேதம் அதிகமாகும் தருவாயில் காப்பர் ஆக்ஷிகுளோரைடு பசையை மரத்தின்   அடிப்பாகத்தில் தடவ வேண்டும். 
 
                - வண்டு சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு மோனோகுரோட்டாபாஸ் 10   லிருந்து 20 மிலி வரை எடுத்து பாதிக்கப்பட்ட துளையினுள் செலுத்த வேண்டும் 
 
                - கார்போபீயூரான் குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கி வீதம் செலுத்திய பின்பு   களிமண் வைத்த துளையை அடைத்து விட வேண்டும் 
 
              | 
           
               
  |