| பயிர் பாதுகாப்பு :: பட்டாணி பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            | ப்யூசேரியம்  வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ்போரம் வகை பிசி
               அறிகுறிகள்: 
           
            
              
                - செடிகள் தொங்கிக் காணப்படும். தொடர்ந்து  உடனடியாக மடியும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, முதிர்வதற்கு முன் உதிர்ந்துவிடும்
 
                - காய் உருவாதலும் பாதிக்கப்படும். கழுத்துப்  பகுதியில் செடிகள் வாடி, காய்ந்து, நிறமாற்றம் ஏற்படும்
 
                - நோயுள்ள செடிகளை எளிதில் பிடுங்கலாம்
 
                - நோயுற்ற தண்டை வெட்டிப் பார்க்கும்  போது, அடர் பழுப்பு நிறத்தில், நிறமாற்றம் உள்ள வளையம் வாஸ்குலர் திசுக்களைச் சுற்றிக்  காணப்படும். வேர் முடிகளிலிருந்து நேரடியாக தாக்குதல் ஏற்படும்
 
                - மண்ணில் இந்த பூஞ்சாண் உயிர் வாழும்
 
               
             
            கட்டுப்பாடு: 
            
              
                - காரபண்டாசிம் (2 கிராம் / கிலோ விதை)  என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
 
                - காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% மண்ணில்  நனையுமாறு இடுதல் வேண்டும்.
 
               
 
               | 
             
             
                 
               | 
           
         
  |