| பயிர் பாதுகாப்பு  :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
            
              | செம்புள்ளி நோய்: ஹெல்மின்தோஸ்போரியம் ஒரைசே  | 
             
           
         
       
        
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - இந்நோய்       எள் வடிவ இலைப்புள்ளி (அ) பூசணவித்து (அ) பூசணக் கருகல் நோய் என அழைக்கப்படுகிறது.
 
                   - நாற்றாங்காலின் நாற்றுப் பருவத்திலிருந்து நடவு வயலின்       பால் பருவம் வரை இப்பூசணம் பயிரைத் தாக்கும்.
 
                   - முதலில்       இந்நோய் மிகச்சிறிய பழுப்புப் புள்ளிகளாகத் தோன்றும். பின் உருளை (அ) முட்டை வடிவமாக       இருந்து வட்ட வடிவப் புள்ளிகளாக மாறிவிடும்.
 
                   - புள்ளிகள்       0.5-2.0 மிமீ அகலத்துடன் இருக்கும். பின் அனைத்து புள்ளிகளும் ஒன்று சேர்ந்து       பெரிய திட்டுக்களாக மாறிவிடும். பின் பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலைகள் காய்ந்து       விடும்.
 
                   - இந்நோய்       பழுப்பு நிறப் புள்ளிகளுடன் கதிர் மற்றும் கழுத்துப் பகுதியை தாக்கும்.
 
                   - விதைகளும்       தாக்கப்படுகின்றன. (கொம்மையின் மேலுள்ள புள்ளிகள் கருப்பு அல்லது பழுப்பு நிறப்       புள்ளிகளாக இருக்கும்). இவை மென்பட்டுத் துணி போன்று காணப்படும்.
 
                   - நாற்றுக்கள்       மடிந்தும் நோய் தாக்கப்பட்ட நாற்றாங்கால்       சற்று தொலைவிலிருந்து பார்க்கும்போது பழுப்பு நிற துரு ஏறிய பயிர்கள் போன்றும்       காட்சியளிக்கும்.
 
                   - கொம்மையில்       அடர் பழுப்பு அல்லது கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.
 
                   - விதை முளைப்பு       திறன் பாதிக்கப்படுவதோடு நாற்றுக்கள் மடிந்துவிடும். தானியத் தரம் மற்றும் அதன்       எடையும் குறைகிறது.
 
                   - தீவிர       நோய் தாக்குதலின் போது 50% மகசூல் குறைவு ஏற்படுகிறது. 
 
                   - நோய்       பரவும் விதம் மற்றும் நீடித்திருக்கும் தன்மை: நோயால்       பாதிக்கப்பட்ட விதைகள் மூலம் பரவும் நெற்பயிர் குடும்பத்தை சார்ந்த மற்ற களை செடிகள்       மீது இப் பூசணங்கள் உயிர் வாழ்கின்றன. விதைகளில் 4 வருடங்களுக்கு மேல் வாழக்கூடியவை.       நோய் தாக்கப்பட்ட விதைகள், தன்னிச்சையாய் வளர்ந்த நெற்பயிர், நோய் தாக்கப்பட்ட       நெற்பயிர், சில களைச் செடிகள் வயலில் நோய் பரவுவதற்கான முக்கிய மூலங்கள். காற்றுவழியாக       நோயக்காரணி பரவுகிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள மண்ணிலும், நீர் தேங்காத       மண்ணிலும் இந்நோய் தாக்குதல் இருக்கும். ஆனால் நெற்பயிரை எளிதில் தாக்காது. ஊட்டச்சத்து       தனிமங்கள் பற்றாக்குறை இருக்கும் மண் அல்லது நஞ்சுப் பொருள்கள் தேக்கம் உள்ள மண்ணிலும்       இந்நோய் பரவும
 
                   - சாதகமான       நிலைகள்: வெப்ப       நிலை அளவு 25-30°C, ஈரப்பதம் 80 சதவிகிதத்திற்கும் மேல் இருத்தல்,மிகுதியான தழைச்சத்து       உரம், இலைகள் ஈரமாக இருத்தல். 
 
              | 
           
          
            
              
                |   | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
                  | 
               
              
                |   | 
                பழுப்புப் புள்ளிகள் | 
                  | 
                எள் வடிவ இலைப்புள்ளி | 
                  | 
                தாக்கப்பட்ட பயிர | 
                  | 
                  | 
                  | 
               
              | 
           
          
            
              
                நோய்க் காரணி: 
                  
                    - நநோய் விளைவிக்கும் பூசணம் இரு       நிலைகளில் ஏற்படும்.  
 
                    - பூசணத்தின் உடல் உறுப்பு வடிவங்களில்,       கருப்பு மென்பட்டுத் துணி போன்ற பூசண இழைகளைக் கொண்டிருக்கும்.
 
                    - இவை கிடைமட்ட பூசண இழைகள் மற்றும்       நிமிர் பூசணவித்துக்களால் ஆனவை.
 
                    - பூசண இழைகள் அதிகமாவும், கிளைகளுடனும்       ஒன்றோடொன்று பின்னி இணைந்தும், அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
 
                    - பூசண வித்துக்கள் பூசண இழைகளிலிருந்தும்       உருவாகும் பக்கக் கிளை போல் வெளிவரும். கொனீடியா சற்று வளைந்தும் மத்தியப் பகுதியில்       சற்று அகன்றும், நுனியை நோக்கி மெலிந்தும் காணப்படும். 
 
                    | 
                 
              
                | கட்டுப்பாடு முறைகள் : | 
                 
              
                
                  - நோயற்ற       விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
 
                  - களை செடிகள்,       மாற்று செடிகளை அழிக்க வேண்டும்.
 
                  - நோய் எதிர்ப்புத்       திறன் கொண்ட இரகங்களான ஏடீடி 44, பீஒய் 4, கோஆர்ஹச் 1, கோ       44, காவேரி பவானி, டிபிஎஸ் 4 மற்றும் தனு ஆகியவற்றை பயிரிடுதல்.
 
                  - பயிர்       வளர்ச்சிக்கேற்ற முறையான ஊட்டச்சத்துக்களை அளித்தல் மற்றும் நீர் பற்றாக்குறை       ஏற்படாமல் தடுக்கவேண்டும்.
 
                  - நாற்று       நடுவதற்கு முன்னர் சிலிக்கான் சத்து அளித்து பற்றாக்குறைய சரி செய்ய வேண்டும். 
 
                  - வளமற்ற       மண்ணில் சிலிக்கான் உரங்கள் பயன்படுத்தி முறையான உர மேலாண்மை செய்தால் நோயின்       தீவிரத்தைக் குறைக்கலாம்.
 
                 
                  
                    - சூடோமோனாஸ்       ஃபுளோரசன்ஸ் 10 கிராம்/கிலோ       விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து 2.5 கிலோ /எக்டர்       என்ற அளவில் 100 லிட்டர் நீருடன் கலந்து 30 நிமிடங்கள் நாற்றுக்களை நனைத்து பின்       நட வேண்டும் அல்லது
 
                    - கேப்டன்       அல்லது திரம் @ 2.0 கிராம்/கிலோ விதையுடன் ஊற வைத்தல் அல்லது விதை நேர்த்தி செய்தல்வேண்டும் அல்லது
 
                    - 2.5 கிராம்       அக்ரோசன் அல்லது செரசன்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்தல்வேண்டும் அல்லது
 
                    - விதைக்கும்       முன் விதைகளை வெந்நீருடன் 10-12 நிமிடங்கள் நேர்த்தி செய்தல் (53° - 54° செ)வேண்டும்.       குளிர் நீரில் 8 மணி நேரம் விதைகளை முன்னரே ஊற வைத்து விதை நேர்த்தி செய்யப்பட வேண்டும்.
 
                   
                  
                    - இரண்டாம் நிலை நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த, மேன்கோசெப்       (2.0 கிராம்/லிட்டர்) 10-15 நாட்கள் இடைவெளியில் 2-3 முறை தெளிக்க வேண்டும். பூத்தல் பருவம் மற்றும் அதற்கு பின் பருவங்களிலும்,       முன் வேளையில் அல்லது மதிய வேளையில் தெளித்தல் வேண்டும் அல்லது மெட்டோமினோஸ்ட்ரோபின் 5௦௦ மி.லி./ எக்டருக்கு தெளிக்கவும். 
 
                    | 
                 
              | 
           
          
             | 
           
               
  |