| பயிர் பாதுகாப்பு  :: நெல் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
            
              | மஞ்சள் குட்டை  நோய்: மைக்கோ பிலாஸ்மா (பூசண அறைக்குழம்பு) போன்ற உயிர் | 
             
           
         
       
        
          
            தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - நோய் தாக்கப்பட்ட       பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகவும், மஞ்சள் கலந்த பச்சை நிறம் முதல் வெண்பச்சை       நிற இலைகளையம் கொண்டிருக்கும்.
 
                   - அதிக துார்களுடனும்,       இலைகள் மென்மையாகவும் சற்று உதிர்ந்தும் காணப்படும். வேர்களும் வளர்ச்சி குன்றி       காணப்படும்.
 
                   - இலைகளின்       மேல் பசுமை சோகை ஏற்பட்டு இலையுறை வரையிலும் பரவும்.
 
                   - இலை நரம்புகளுக்கு       இணையாக கீறல்கள் உருவாகும்.
 
                   - பயிரின்       முன் பருவத்திலேயே நோய் தாக்குதல் ஏற்பட்டால் பயிர் முதிர்ச்சியவடைவதற்கு முன்னரே       இறந்துவிடும்.
 
                   - பயிர்கள்       இறக்காமல் நிலைத்திலிருந்தாலும் கூட கதிர்கள் தோன்றாமல் அல்லது குறைந்த எண்ணிக்கைகளையுடைய       தானியங்கள் கொண்ட கதிர்கள் மட்டுமே காணப்படும்.
 
                   - நோய்       பரவும் விதம்:  மைக்கோபிளாஸ்மா       போன்ற உயிரி உள்ளுறைக் காலமான 25-30 நாட்களுக்குள் நெபோடெட்டிக்ஸ் வைரசன்ஸ் மற்றும்       நெபோடெட்டிக்ஸ் நைக்ரோபிக்டஸ் ஆகிய பூச்சிகளால்       பரவுகின்றது.       சில புல்வகைக் களைச் செடிகளின் மேல் வாழக் கூடியவை.
 
               
கட்டுப்பாடு: 
            
                - கோடைக்காலத்தில்       ஆழமான உழவு மற்றும் பயிர்த் துார்களை எரித்தல்.
 
                 - ஐஆர்       62 மற்றும் ஐஆர் 64 போன்ற நோய் எதிர்க்கும் திறன் கொண்ட நெல் இரகங்களைப் பயிரிடுதல்       வேண்டும்.
 
                 - நெல் துங்ரோ       நச்சுயிரி நோய்க்குப் பின்பற்றப்படும் மேலாண்மை முறைகளை இந்நோய்க்கும் மேற்கொள்ளலாம்.
 
                 - பருவத்திற்கு       முன்பே பயிரிடுவதை தவிர்க்கவேண்டும்.
 
                 - மாற்று       பயிர்களற்ற தரிசு நிலத்தில் பயிர் நடவு செய்வது, தரிசு நெல் வயல்களில் உழவு மேற்கொள்ளுதல்,       தாமதமான நடவு, ஒரே நேரத்தில் சீரான நடவு, பருவத்திற்கு முன்னர் மற்றும் தாமதமாய்       நடவு செய்த பயிர்கள் ஒன்றோடொன்று இணையாமல் தடுப்பது ஆகிய செயல்களை மேற்கொள்ள வேண்டும்.
 
              | 
              | 
           
               
  |