பயிர் பாதுகாப்பு :: வெங்காயம் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
வெங்காய ஈ : டிலியா ஆண்டிகுவா

சேதத்தின் விபரம்:

  • பூச்சி தாக்குதலின் முதல் அறிகுறி - வெங்காய இலைகள் வாடும் பிறகு, இலைகள் தளர்வுற்று, இலைகுலைந்துவிடும்.
  • வெங்காய குமிழ்கள் வளர்ச்சி சிதைவுற்று, அதன் திசுக்கள் அழுகியும், வியாபாரத்திற்கு தகுதியற்றதாக்கிவிடும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை : நீண்ட வெண்ணிற முட்டை, வெங்காயத்தின் அடிப்பகுதியில் மண்ணிற்கு அருகில் இடும்.
  • ஈ இனப்புழு : வெண்ணிறத்தில் கால்களற்றது.
  • கூட்டுப்புழு : கூட்டுப்புழு பருவம் மண்ணில் மேற்கொள்ளும்.
  • பூச்சி : சாம்பல் நிற இறக்கையுடன் உள்ள ஈ.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • சீரான பயிர்சுழற்ச்சி முறை பின்பற்ற வேண்டும்.
  • நடவுக்கு முன்பு திமெட்டை மண்ணில் இடவும் (அ) மாலத்தியான் 1 லிட்டர் / ஹெக்டேருக்கு தெளிக்கவும்.
உருமாறிய வளர்ச்சி 
அழுகுதல்
முட்டை  
புழு  
 பூச்சி
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015