வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் கிரேமினிகோலா 
              விருந்துயிரி: தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை, புடலைங்காய்  
              அறிகுறிகள்: 
              
                
                  
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | பாதிக்கப்பட்ட தாவரங்கள் | 
                    பூசணியின் வேர் | 
                   
                
             
              
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | பாதிக்கப்பட்ட வெண்டை நாற்றுகல் | 
                    பாதிக்கப்பட்ட மிளகாய் நாற்றுகல் | 
                   
                
               
              
                - வேர் முடிச்சுகள் - புடலைக்காயில் பெரிய முடிச்சுகளும், இதர காய்கரிகளில் உறுதியான பெரிய முடிச்சுகளும், மிளகாயில் சிறிய முடிச்சுகளும் காணப்படும்.
 
                - அதிகம் தாக்குண்ட நிலையில் செடிகளின் இலைகள் வெளிறியும் வளர்ச்சி குன்றியும் காணப்படும்.
 
                - பாதிக்கப்பட்ட நாற்றுக்கள் வாடிக் காய்ந்து விடும்.
 
                - தப்பிப் பிழைக்கும் தாவரங்களில் பூக்கள் மற்றும் பழங்களின் உற்பத்தி வெகுவாக குறைகிறது.
 
                - மெலாய்டோகைன் நூற்புழு, கேரட் போன்ற பயிர்களின் வேர் மற்றும் கிழங்குகளில் தரம் மற்றும் விளைச்சளின் அளவை குறைத்து, அதன் சந்தை மதிப்பையும் குறைக்கிறது.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - நாற்றங்காலில்,  சூடோமோனாஸ் புளூரசன்ஸ் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் இடவும்.
 
                - எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகளைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
 
                - களைகளைக் கட்டுப்படுத்தவும்.
 
                - அறுவடைக்கு பின் வேர் முடிச்சுகள் கொண்ட வேர்களை முழுவதுமாக அப்புறப்படுத்தவும் 
 
                - கோடை காலத்தில் நிறமற்ற பாலிதீன் விரிப்புகளைப்  பரப்பி மண் வெப்பமூட்டல் மேற்கொள்ளலாம் 
 
                - கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ இடவும் 
 
                |