அறிகுறிகள்: 
                
                  - இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, வளர்ச்சி குன்றி காணப்படும் 
 
                  - வயலில் தாவரங்கள் திட்டுத்திட்டாக காணப்படும் 
 
                  - வேகமான முதிர்ச்சி மற்றும் பக்கவாட்டு வேர்கள் பெருகி காணப்படும் 
 
                  - பூக்கும் பருவத்தில், தாவரத்தின் வேரில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறமுடைய முதிராத பெண் நூற்புழுக்கள் காணப்படும்.
 
                  - பெண் நூற்புழுக்கள், கிழங்கின் மேற்பரப்பில் குறைந்த அளவில் காணப்படும்.
 
                 
                கட்டுப்பாடு: 
                
                  - தானியப் பயிர்கள் மற்றும் பயறு வகைகளைக் கொண்டு 3 - 7 வருடங்களுக்கு பயிர் சுழற்சி செய்யவும்.
 
                  - எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகளை பயன்படுத்தவும் (குப்ரி ஸ்வர்னா மற்றும் குப்ரி தேன்மலை)
 
                  - நடவு செய்யும் பருவத்தை சரி செய்யவும் 
 
                  - கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ இடவும்.
 
                | 
              
                
                  
                      | 
                      | 
                   
                  
                    பாதிக்கப்பட்ட வயல்     | 
                    உருளைக்கிழங்கு வேர் | 
                   
                
                |