TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: ஆமணுக்கு பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள்

மொச்சை வடிவ நூற்புழு ரோட்டிலென்கஸ் ரெனிபார்மிஸ்

அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட செடியின் வளர்ச்சிக் குன்றி, இலைகள் உதிர்ந்து, பழங்கள் மற்றும் விதைகளின் வடிவம் மாறிக் காணப்படும்.
  • வேரின் நிறம் மாறி அழுகிக்கானப்படும்.
  • மிகவும் பாதிக்கப்பட்ட செடிகள் இறந்து விடும்.

கட்டுப்பாடு :

  • கார்போபியூரான் 3ஜி மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ இடுதல்.
  • சோளம், மக்காச்சோளம் மற்றும் கோதுமையை போன்ற பயிர்களைக் கொண்டு பயிர் சுழற்சி செய்யவும்.
  • தொழுவுரம் 12.5 டன்/எக்டர் அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ/எக்டர் இடவும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016