பயிர் பாதுகாப்பு :: வாழையைத் தாக்கும் நூற்புழுக்கள்  
       
        
          
            
               ஒருங்கிணைந்த நூற்புழு மேலாண்மை  
                உழவியல் முறைகள் : 
                
                  - கோடையில்  ஆழமாக உழவு செய்தல் 
 
                  - நூற்புழு பாதிப்பற்ற கிழங்கு பயன்படுத்தவும்.
 
                  - கிழங்குகளை, 2 வாரங்களுக்கு வெயிலில் உலர வைத்து அல்லது 55 டிகிரி செல்சியஸ் வெந்நீரில் 10 நிமிடம் வைத்து விதை நேர்த்தி செய்யவும்.
 
                  - நெல் போன்ற தானிய பயிர்கள் அல்லாத பயிர் வகைகளைக் கொண்டு பயிர்ச்சுழற்சி செய்யவும்.
 
                  - நிலவளங்காப்பு பயிராக கலப்பகோனியம் பயன்படுத்தவும்.
 
                  - பிசாங் லிலிங் போன்ற எதிர்ப்புத்திறன் கொண்ட பயிர் வகைகளை பயன்படுத்தவும் 
 
                  - சணப்பை அல்லது சாமந்தி பயிர்களை பசுந்தாள் உரமாக பயன்படுத்தவும் 
 
                  - அறுவடைக்குப்பின் வயலிலுள்ள தண்டுகளை அப்புறப்படுத்தவும்.
 
                | 
                | 
             
            
              உயிரியல் முறைகள் : 
                
                  - கிழங்குகளை நாடும் பொழுது வேப்பம்புண்ணாக்கு (250 கிராம்/மரம்), தொழுவுரம் (1 கிலோ/மரம்) மற்றும் கரும்பாலைக்கழிவுகள் (15 டன்/எக்டர்) ஆகியவற்றையும் இடவும் 
 
                  - அடிக்கன்றுகளை  சூடோமோனாஸ் ஃபுளூரசென்ஸ் 20 கிராம்/கன்று என்ற அளவில் தெளிக்கவும், இதனைத் தொடர்ந்து  சூடோமோனாஸ் ஃபுளூரசென்ஸ் 2.5 கிலோ/எக்டருடன் 50 கிலோ தொழுவுரம் இடவும் 
 
                  - நடவு செய்த இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் மாதங்களில்  சூடோமோனாஸ் ஃபுளூரசென்ஸ் (Pf1) எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் சொட்டு நீர் பாசனத்துடன் கலந்து இடவும் 
 
                 
                இரசாயன முறை : 
                
                  - கிழங்கின் மேற்பரப்பிலுள்ள தோலை கத்தி கொண்டு சீவி, பின் களிமண் கரைசலில் மூழ்கி எடுத்து, கிழங்கு ஒன்றுக்கு 40கிராம் கார்போபியூரான் 3G குருணை மருந்தை அதன் மேல் தூவி, நிழலில் காய வைத்து, நடவு செய்யவும் 
 
                  - நடவு செய்த 90 நாட்களுக்குப் பின் கிழங்கு ஒன்றுக்கு 40 கிராம் கார்போபியுரான் 3G இடவும் 
 
                  - திசு வளர்ப்பு வாழையில், கார்போபியுரான் 3G 20 கிராம்/கிழங்கு என்ற அளவில் நடவு செய்யும் பொழுதும், 20 கிராம்/கிழங்கு என்ற அளவில் மீண்டும் மூன்று மாதத்திற்கு பின் இடவும் 
 
                | 
             
          
         
            |