வேர்குடையும் நூற்புழு : ராடோபில்லஸ் சிமுலிஸ் 
                அறிகுறிகள்: 
                
                  - இது இடம் பெயரும் அகஒட்டுண்ணியாகும். இதன் முழுவாழ்க்கைச் சுழற்சியையும் வேரில் முடுத்து, பின் வேரை சிதைத்துவிடும்.
 
                  - தாக்குதலின் ஆரம்ப அறிகுறி, வேரின் மேல் இரத்த சிவப்பு புண்கள் காணப்படும்.
 
                  - நூற்புழு, சாதாரணமாக வேர் மற்றும் கிழங்குகளில் நுழைந்து சிவந்த பழுப்பு நிற புண்களை ஏற்படுத்தும்.
 
                  - பாதிக்கப்பட்ட வேரை நீளவாக்கில் பிரித்தால் புண்களை தெளிவாக காணலாம்.
 
                  - வேர் மற்றும் கிழங்கின் சிதைவினால், தாவரத்தின் வனர்ச்சி குன்றி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
 
                  - நூற்புழுவினால் ஏற்படும் புண்கள் முதன்மை வேரோடு சேர்த்து ஊன்று வேரையும் பாதிக்கிறது.
 
                  -  ராடோபிலஸ் சிமிலிஸ் பாதிப்புடன் பிசேரியம் ஆக்சிஸ்போரம் வாடல் இணைந்து இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
 
                 
சுருள் வடிவ நூற்புழு: ஹெலிக்கோடைலங்கஸ் மல்டிசிங்டஸ் 
                
                  - இது புற மற்றும் அக ஒட்டுண்ணியுமாகும் 
 
                  - நூற்புழுக்கள், தாவரத்தின் மேற்புறத்தோளில் உள்ள புறணிச் செல்களை உண்பதால், வேரில் புண்கள் மற்றும் சிதைவுறு புண்களை ஏற்படுத்தும்.
 
                  - மண்ணில் நூற்புழுவின் பெருக்கத்தினால், உறிஞ்சு வேர்களை பாதிக்கிறது.
 
                  - பாதிக்கப்பட்ட தாவரத்தின் வேர் மற்றும் கிழங்குகள் சிவந்த பழுப்பு / கருப்பு நிறத்துடன் காணப்படும்.
 
                 
                வேர் அழுகல் நூற்புழு –  பிராட்டிலென்கஸ் காஃபியே 
                
                  - இடம்பெயரும் அகஒட்டுண்ணியாகும் மேலும்  ராடோபில்லஸ் சிமுலிஸ் -யை ஒத்திருக்கும்.
 
                  - கடுமையாக பாதிக்கப்பட்ட வேரின் புறணிப் பகுதி கருப்பு நிறமாக மாறிவிடும்.
 
                 
                
                  
                      | 
                      | 
                      | 
                   
                  
                    | வேர்புறணியின் சிதைவு | 
                    வேர்களின் மீது ரத்தச் சிவப்பு நிற புண்கள் | 
                    வேரோடு சாய்ந்து  நூற்புழு பாதித்த வாழை | 
                   
                |