பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வர்ணமயமான நாவாய்பூச்சி: பார்கிராடா கில்லரரிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு இலையைத் தாக்கி சேதப்படுத்தும். தாக்கப்பட்ட இளம் செடிகள் காய்ந்து விடும்.
  • நன்கு வளர்ச்சியடைந்த காயினைத் துளைத்து செல்கிறது. பூச்சி காயின் மேல் பசை போன்ற திரவத்தைச் சுரக்க செய்கிறது.

பூச்சியின் அடையாளம்:

  • நாவாய் பூச்சி கருமை நிறமாகவும், சிகப்பு மற்றும் மஞ்சள் வரிகளைக் கொண்டிருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • நிலத்தை ஆழமாக உழுது நாவாய்பூச்சியின் முட்டைகளை அழிக்கலாம்
  • முந்தைய பருவங்களில் விதைத்து இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
  • விதைத்த நான்காவது வாரத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் அசுவினி தாக்குதல் குறைகிறதுஅறுவடை செய்தவுடனே கதிரடித்தல் மூலம் இப்பூச்சியின் தாக்குதலைத் தவிர்க்கலாம்
  • வயலில் அறுவடைக்கு பிறகு மீதமுள்ள குப்பைகளை எரித்து விடுவதால் அடுத்தபயிர் பருவத்திற்கு பூச்சியின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறதுநாவாய்பூச்சிகள் இலைகளிலும் தண்டுகளிலும் கூட்டமாக காணப்படும். இதனால் இவற்றை சேகரித்து அழிக்கலாம்.
  • அலோபோரா போன்ற இயற்கை எதிரியை பயன்படுத்தி நாவாய்ப்பூச்சியை அழிக்கலாம்.
  • மாலத்தியான் 1000 மிலி மருந்தை எக்டர்க்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015