பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கடுகு அசுவினி: லையாபிஸ் எரிசிமி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பூச்சியானது இலை தண்டு காய்களை தாக்கி சாற்றை உறிஞ்சுகிறது
  • தாக்குதலுக்கு உள்ளான இலையானது சுருண்டு இறுதியில் வறண்டு விடுகிறது
  • செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்
  • குஞ்சுகள் இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற திரவத்தை சுரக்க செய்வதால் இலைகள் பூஞ்சானத்தால் கவரப்பட்டு கருமைநிறமாக மாறிவிடும்.

பூச்சியின் அடையாளம்:

  • பூச்சியாகது மிக சிறியதாக மெல்லியதாகவும் ஒரு ஜோடி நீட்சிகளையும் கொண்டிக்கும்.

கட்டுபடுத்தும் முறை:

  • பூச்சியின் தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய இரகங்களான ஜே.எம் - 1 மற்றும் ஆர்.கே.9501 ஆகியவற்றை பயிரிடலாம்.
  • தாக்கப்பட்ட செடிகளின் பகுதிகளை சேகரித்து அகற்றி விட வேண்டும்.
  • அக்டோபர் மாதம் 20 ம் தேதிக்கு முன்பே விதைத்தல் வேண்டும் இதன் மூலம் பூச்சியின் தாக்குதலிருந்து விடுபடலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை கொண்டு பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • கீழ்காணும் இயற்கை எதிரிகளை பயன்படுத்தி அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.
  • காக்ஸ்நெலா செப்டம்புன்ஸ்டேட்டா, மானோகிலியஸ் செக்ஸ்மாக்குலேட்டா, கிரைசோபெர்லா கார்னியர, கிப்போடோமியா வேரிகேட்டா
  • பூச்சிகளைத் தாக்கும் பூஞ்சைகளான செப்போலாஸ்போரியம், இன்டமாப்தெரா, வெர்டிசிலியம் லெகானி போன்றவற்றை பயன்படுத்தி அசுவினியைக் கட்டுப்படுத்தலாம்.
  • இயற்கை எதிரிகளான சிரிபிட் ஈ வகை பூச்சிகளான சேப்ராபோரியோ ஸ்பிசிஸ், மெட்டாசிரியில் ஸ்பிசிஸ்சேந்துகிராம்ம ஸ்பிசிஸ் மற்றும் சிரிபிஸ் ஸ்பிசிஸ் முலம் அசுவி பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • பிர்க்கனிட் ஒட்டுண்ணியான டைஆர்டடிலா ரேபியா முலம் அசுவினை கட்டுப்படுத்தலாம்.
  • இயற்கை எதிரியான க்ரைசோப்ரலா கார்ணியா முலம் கட்டுப்படுத்தலாம். மோட்டசில்லா காஸ்பிக்கா என்ற பறவையின் முலம் பிப்பரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அசுவின் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • பயிர்கள் பூக்கும் தருணத்தில் டைமீத்தேயேட் அல்லது மெதில் டெமட்டான் மருந்தை எக்டர்க்கு 625 - 1000 மிலி கலந்து தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015