| பயிர் பாதுகாப்பு  :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                 கடுகு குளவி: அத்தேலியா லூஜென்ஸ் ப்ராக்ஸிமா  | 
               
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்:
                      
                        - இளம் புழு இலையை உண்டு      சேதப்படுத்தும்
 
                        - தாக்கப்பட்ட இலைகளில்      சிறிய வளைகள் காணப்படும்
 
                        - தாக்கப்பட்ட செடிகள்      காய்ந்துவிடும்
 
                          | 
                     
                  
                    பூச்சியின் அடையாளம்: 
                      
                        - புழு: பழுப்பு நிறத்தில்,      உருண்டை வடிவில் இருக்கும். தலையை அடுத்து மார்பு பகுதியில் மூன்று இணைக் கால்களும்,      வயிற்றுப் பகுதியில் ஏழு இணைக்கால்களும் காணப்படும்.
 
                        - குளவி - தலையும் உடலும்      பழுப்பு நிறத்திலிருக்கும். வயிற்றுப்பகுதி ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பெண் அந்துப்பூச்சியின்      முட்டையிடும் உறுப்பு இரம்பம் போல் காணப்படும்.
 
                        | 
                      | 
                   
                   
கட்டுப்படுத்தும் முறை:
                  
                    - கோடை காலங்களில் நிலத்தை      உழவு செய்து கூட்டு புழுக்களை அழிக்கலாம்
 
                    - வயலை சுத்தமாக வைத்துக்      கொள்ள வேண்டும்
 
                    - முன் கூட்டியே விதைப்பது சிறந்தது 
 
                    - இளம்      நாற்றாக இருக்கும் தருவாயில் தண்ணீர் பாய்ச்சுவதால் பூச்சியானது கட்டுப்படுத்தப்படுகிறது.தாக்கப்பட்ட பகுதிகளையும்,      புழுவையும் சேகரித்து அகற்ற வேண்டும்
 
                    - இயற்கை எதிரியான பெரிலிஸ்ஸஸ் சின்குலேட்டர்யை பேக்டீரியம் சேராட்டி மார்சன்ஸ் பயன்படுத்தி கடுகு      குளவியை அழிக்கலாம்
 
                    - பாகற்காய் விதையிலிருந்து      பெறப்பட்ட எண்ணெய்யை ஊன்தடுப்பான்களாக பயன்படுத்தலாம்.
 
                    - மாலத்தியான் 1000 மிலி      மருந்தை எக்டர்க்கு 700 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
 
                    | 
                 
              | 
           
         
  |