பயிர் பாதுகாப்பு :: கடுகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வைர முதுகு அந்துப்பூச்சி: புருட்டெல்லா ஸைலோஸ்டெல்லா

தாக்குதலின் அறிகுறிகள்:
  • இளம் புழுக்கள் இலைகளின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்
  • தாக்கப்பட்ட இலைகளின் மேற்புறத்தில் வெண்ணிறத்திட்டுகள் காணப்படும்
  • வளர்ச்சியடைந்த புழு காய்களை துளைத்து உட்சென்று உண்ணுகிறது
Crop Protection Mustard
துளை
பூச்சியின் அடையாளம்:
  • புழு: புழுக்கள் இளம் பச்சை நிறத்திலிருக்கும்
  • அந்துப்பூச்சி: அந்துப்பூச்சி சாம்பல் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் வெண்மை நிறக்கோடுகள் இருக்கும். இறக்கைகளை மடக்கி அமர்ந்திருக்கும் போது வைரம் போன்ற புள்ளிகள் முதுகு புறத்தில் இருப்பதைக் காணலாம்.

கட்டுப்படுத்தும் முறை:

  • இனக்கவர்ச்சி பொறியை ஏக்கர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
  • புழுக்களை சேகரித்து அகற்ற வேண்டும்
  • கோட்டீசியா புருட்டெல்லா மற்றும் டைடெக்மா செமிகிளைசம் போன்ற ஒட்டுண்ணிகளை பயன்படுத்தி வைரமுதுகு அந்துப் பூச்சியை நன்கு கட்டுப்படுத்தலாம்.
  • வளர்ச்சியடைந்த புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 5 சதம் தூளை எக்டர்க்கு 37.5 கிலோ வீதம் தூவி புழுக்களின் தாக்குதலைக் குறைக்கலாம்
Crop Protection Mustard
அந்துப்பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015