சாம்பல் கருகல் நோய்: பெஸ்டாலோடியா மேன்கிபேரா 
அறிகுறிகள்: 
              
                - இலைகளில் நுனியில் மற்றும் விளிம்பில் பழுப்புப்புள்ளிகளை உருவாக்குகிறது.
 
                - புள்ளியின் அளவு அதிகமாகிறது மற்றும் அடர் பழுப்பு நிறமாகிறது.
 
                - அசர்வெளி பூஞ்சை இருக்கும் இடத்தில் கறுப்புப்புள்ளிகளை உருவாக்குகிறது.
 
                - ஒரு வருடத்திற்கு மேல் மா இலைகளில் வாழ்கிறது மற்றும் காற்று மூலம் பூசண இலைகள் மூலம் பரவுகிறது.
 
                - வெப்பநிலை 20- 50°செல்சியஸ் மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது அதிகமாக நோய்த்தாக்கம் காணப்படுகிறது. 
 
               
              கட்டுப்பாடு: 
              
                - பாதிக்கப்பட்ட செடியின் பகுதிகளை அழிக்க வேண்டும்.
 
                - காப்பர் ஆக்ஸிகுளோரைட்(0.25%), மேன்கோசெப் ((0.25%) அல்லது போர்டோ கலவையைத்தெளிக்கவும்.
 
              | 
             
               
              
              
                  | 
               
              
                | சாம்பல் கருகல் நோய் | 
               
              |