மாங்கொட்டைத் துளைப்பான்: டெர்னோகிட்டஸ் மேஞ்ஜிஃபெரே  
              தாக்குதலின்  விபரம்: 
            
              - புழுக்கள் பழங்களை துளைத்துக் கொண்டு  உள்ளே சென்று சதைப்பகுதியை உண்ணுகிறது
 
              - நாளடைவில் விதைக்குள் சென்று விதைப்பருவத்தை  தாக்குகிறது
 
              - சேதம் அதிகமடைந்த நிலையில் காய்கள் பழுப்பேரி  மடிந்துவிடும் (அ) கீழே விழுந்துவிடும்
 
             
            பூச்சியின்  விபரம்: 
            
              - புழு - கால்கள் கிடையாது மஞ்சள் நிறமுடையது  தலை கருமை நிறத்தில் இருக்கும்.
 
              - கூண்வண்டு - கருமை கலந்த பழுப்பு நிறத்தில்  இருக்கும்.
 
               
            
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அகற்றி  விட வேண்டும்.
 
              - பூக்கள் மலராத பருவக்காலத்தில் பூச்சி  மருந்தை நேரிடையாக மரங்களின் அடியில் தெளிக்கவும்.
 
              - ஆசிபேட் 75 SP 1.5 கிராம் /லிட்டர் அல்லது லாம்டா சைஹலோத்திரின் 5 EC 2.5 மி.லி./லிட்டர் தெளிக்கவும் 
 
              |