பழ ஈ: பாக்ட்டோசீரா டார்சாலிஸ் 
                தாக்குதலின்  விபரம்: 
            
              - முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள்  சதைப்பகுதியை தின்று அழிக்கும்.
 
              - தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள்  காணப்படும்.
 
              - சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி  பழுப்பு நிறத் திரவம் வெளிவரும்.
 
              - சேதமடைந்த பழங்கள் அழுகி கீழே விழுந்துவிடும்.
 
             
            பூச்சியின்  விபரம்: 
            
              - புழு - வெண்ணிற புழுக்கள், கால்கள் இல்லாமலும்  தலை பகுதி அகன்றும் காணப்படும்.
 
              - பழ ஈ - ஈக்கள் ஆரஞ்சு அல்லது பழுப்பு  கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். கண்ணாடி போன்ற இறக்கைகளைக் கொண்டிருக்கும்.
 
               
            
              
                
                    | 
                    | 
                    | 
                 
                
                  | புழுக்கள் மாம்பழத்திலிருந்து வெளியேறுதல் | 
                  பழ ஈ | 
                  புழு | 
                 
              
             
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - பாதிக்கப்பட்ட பழங்களை பறித்து அகற்றி  விட வேண்டும்
 
              - மரத்தைச் சுற்றி உழவு செய்து பழ ஈயின்  கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
 
              - மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறியை  ஹெக்டேர்க்கு பத்து வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
 
              - பைரித்ரம் அல்லது பி.எச்.சியை தண்ணீருடன்  கலந்து தெளிக்கவும்
 
              - மாலத்தியான்  2 மிலி மருந்தை 1 லி தண்ணீருடன் கலந்து தெளித்தால் பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம்
 
              - ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ் மற்றும் ஸ்பாலஞ்சியா  பிலிப்பைன்ஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளைப் பயன்படுத்தி புழு ஈக்களின் தாக்குதலை தடுக்கலாம்
 
              |