மா காவடிப் புழு: தாலஸோடஸ் குவாடுரேரியா 
                தாக்குதலின்  விபரம்: 
            
              - புழுக்கள் மலர்கொத்துக்களை பிணைத்து  அதனுள் இருந்து மொட்டுகளை உண்ணுகிறது.
 
              - சேதம் அதிகமாகும் நிலையில் பூங்கொத்துக்கள்  காய்ந்து விடுகின்றன.
 
             
            பூச்சியின்  விபரம்: 
            
              - காவடிப்புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
              - அந்துப்பூச்சி - பழுப்பு நிறத்தில் இருக்கும்,  முன் இறக்கையில் வெண்ணிறப்பட்டைக்கோடு இருக்கும்.
 
               
            
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - கைகளினால் காவடிப்புழுவை எடுத்து அழிக்கலாம்.
 
              - தாக்கப்பட்ட இலைகளையும் மலர்களையும்  ஒன்று சேர்த்து அகற்ற வேண்டும்.
 
              - விளக்குக் கவர்ச்சி பொறியை ஹெக்டேர்க்கு  ஒன்று என்று வைத்து அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
 
              - மாலத்தியான்  2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
 
              |