சிகப்பு அசுவினி: டாக்ஷிபாப்டிரா ஒடினே 
                தாக்குதலின்  விபரம்: 
            
              - சிகப்பும் பழுப்பும் கலந்த பூங்கொத்துகளில்  கூட்டமாக காணப்படும்.
 
              - சிகப்பு அசுவினி இலைகளின் சாறை உறிஞ்சுகிறது.
 
              - இலைகள் மஞ்சள் நிறமாக மாறி வாடி விடுகிறது.
 
           
            பூச்சியின்  விபரம்: 
            
              - அசுவினி - சிவப்பு (அ) ஊதா நிறத்தில்  இருக்கும்.
 
               
            
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - தாக்கப்பட்ட பகுதிகளை குஞ்சுகள் மற்றும்  அசுவினி ஆகியவற்றோடு சேர்த்து அகற்றிவிட வேண்டும்
 
              - டைமீத்தோயேட் (அ) மெத்தில் டெமட்டான்  1 மிலி மருந்து + 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்
 
              - காக்சினெலிட், சிம்சனஸ் போன்ற இயற்கை  எதிரிகளை பயன்படுத்தி சிகப்பு அசுவினியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
 
              |