தத்துப்பூச்சி: இடியோஸ்கோப்பஸ் கிளைப்பியாலிஸ், இடியோஸ்கோப்பஸ் நிவியோஸ்பார்சஸ், அமிரிடோடஸ் அட்கின்சோனி 
                தாக்குதலின்  அறிகுறிகள்: 
            
              - குஞ்சுகளும், தத்துப்பூச்சியும் பூக்கும்  தருணத்தில் பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுகிறது.
 
              - பூங்கொத்துகள் வாடிவிடுகிறது.
 
              - சேதம் அதிகமாகும் நிலையில் மொட்டுகளும்,  பூக்களும் கருகி உதிர்ந்து விடுகின்றன.
 
              - குஞ்சுகள் தேன் போன்ற கழிவுத் திரவத்தை  இலையின் மேற்புரத்தில் சுரக்க செய்கிறது.
 
              - இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால்  பாதிக்கப்பட்டு கருமை நிறமாக மாறி இறுதியில் வாடிவிடுகிறது.
 
              
               
           
            பூச்சியின்  விபரம்: 
              I.  இடியோஸ்கோப்பஸ் கிளைப்பியாலிஸ்: 
            
              - குஞ்சுகள் - கருமை கலந்த பழுப்பு நிறத்தில்  இருக்கும்.
 
              - தத்துப்பூச்சி - பழுப்பு நிறத்தில் இருக்கும்  தலைப்பகுதி அகன்றும் உடற்பகுதி சிறுத்தும் காணப்படும். முதுகுப் பட்டையிர் இரண்டு புள்ளிகளும்,  தலைப்பகுதியில் 2 புள்ளிகளும் காணப்படும்.
 
             
            II.  இடியோஸ்கோப்பஸ் நிவியோஸ்பார்சஸ்: 
            
              - தத்துப்பூச்சிகள் - நடுத்தர பருமனுடையது,  முதுகு பட்டையில் மூன்று கரும்புள்ளிகளும், தலைப்பகுதியில் வெண்ணிற பட்டைக்கோடு காணப்படும்.
 
             
            III.  அமிரிடோடஸ் அட்கின்சோனி: 
            
              - தத்துப்பூச்சி - இதுவே மிகப்பெரியது  தலையை அடுத்துள்ள மார்பு பட்டையில் இரண்டு கரும்புள்ளிகள் காணப்படும்.
 
               
            
            கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - நெருக்க நடுதல் முறையை தவிர்க்க வேண்டும்.
 
              - பழத்தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள  வேண்டும் களைகளை அகற்ற வேண்டும்.
 
              - அசப்பேட் (1 கிராம் + 1 லி தண்ணீர்),  (அ) பாசலோன் 0.05 சதம் (1.5 மிலி மருந்து + 1 லி தண்ணீரில்) கலந்து தெளிக்கவும்.
 
              - வேப்பம் எண்ணெய் 3 சதம் (அ) வேப்பம்  கொட்டைபுண்ணாக்கு 5 சதம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தெளித்து தத்துப்பூச்சியின் தாக்குதலைக்  கட்டுப்படுத்தலாம்.
 
              |