பித்தியம் தண்டழுகல்: பித்தியம் அபெனிடெர்மேட்டம் 
              
                -  இந்நோய்,  சிக்கிம், ஹிமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான், டெல்லி,  உத்திரப்பிரதேசம், பீகாகர் ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
 
               
              அறிகுறிகள்: 
              
                - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட செடியின் அடி இடைக்கணு மிகவும் மென்மையாகவும். அடர் பழுப்பு நிறத்திலும்  தண்ணீரில் மூழ்கினமாதிரி புள்ளிகள் தோன்றி, செடியை வளரவிடாமல் செய்கிறது.
 
                - சேதப்படுத்தப்பட்ட  இடைக்கணு திருகிய தோற்றத்துடனும், செடியின் எல்லாவிதமான தண்டின் உள்பகுதி சேதம் ஆகும்  வரை செடி உயிருடனும் இருக்கும்.
 
                - இதனை  ஊடகத்தில் பிரிக்கும் போது பித்தியத்தையும், எர்வீனியா வித்தியாசப்படுத்துவது அவசியம்.
 
               
              கட்டுப்பாடு: 
              
                - வடஇந்தியாவில்  ஜீலை 10 முதல் 20க்குள் நடவு மேற்கொள்ளவேண்டும். 
 
                - ஒரு  எக்டருக்கு செடியின் எண்ணிக்கை 50,000 இருக்குமாறும் காத்தல்வேண்டும்.
 
                - வயலில்  தண்ணீர் நன்கு வடியுமாறு காத்தல் வேண்டும்.
 
                - முந்திய  பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
 
                - கேப்டான்  என்ற மருந்தை 1 கிராம் / 100 லிட்டர் என்ற அளவில் அடிக்கணுவில் மண்ணில் தெளிக்கவேண்டும்.
 
                - நோய்  எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான - கங்கா, சேபெட் 2 பயிரிடலாம்.
 
                | 
              
               |