பழுப்புநிறப்புள்ளி  நோய்: பைசோடெர்மா மேய்டிஸ் 
              அறிகுறிகள்: 
              
                - இந்நோய்  ஜம்மு மற்றும் காஷ்மீர், சிக்கிம், மேற்குவங்காளம், பஞ்சாப், இராஜஸ்தான், மத்தியப்  பிரதேசம், கர்நாடகா ஆகிய இடங்களில் பரவியுள்ளது. அதிக வெப்பநிலையில் இந்நோய் பரவுகிறது.
 
                - முதலில்  இலையின் விளிம்புகளில் இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. பின்னர் சிறிய வெளிர்நிறப்  புள்ளிகளாகவும், மற்றும் நோயுள்ள மற்றும் நோயற்ற திசுவின் வரிக்கோடுகள் கொண்டும்  காணப்படுகின்றன.
 
                - இலையில்  மத்திய நரம்பின் பகுதி வட்டவடிவமாகவும் அடர் பழுப்பு  நிறத்திலும், மற்ற இடத்தில் வெளிர் நிறமுடைய புள்ளிகளை கொண்டிருக்கும். கணுவும், இடைக்கணுவும்  பழுப்பு நிறத்தில் இருக்கும்.
 
                - மிகவும்  தீவிர நோய்த்தாக்கம் உள்ள பகுதிகளில், தண்டுப் பகுதியும் சேர்த்து அழுகிவிடும் வாய்ப்புண்டு.
 
               
              கட்டுப்பயிர்: 
              
                - சற்று  முன்பருவத்தில் பயிரிட்டால் இந்நொய் தாக்குவதிலிருந்து தப்பிக்கலாம்.
 
                - வயலைச்  சுற்றிலும் கரும்பு வகையைச் சார்ந்த பயிரை பயிர் செய்வதைத் தவிர்க்கவும்.
 
                - அசைல்  அலனின் பூஞ்சாணக் கொல்லியான மெட்டாலகஸில் பயன்படுத்தலாம்.
 
                | 
              
               |