அடிச்சாம்பல் நோய்: பெரனோஸ்கிரிரோஸ்  போரா சொர்கி 
              
                - இந்நோய்  குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் பரவியுள்ளது.
 
               
              அறிகுறிகள்:
              
                - இந்நோயினால் பாதிக்கப்பட்ட செடி வெளிர் நிறத்திலும், வளர்ச்சி குறைந்தும், இலையின்  மேல் வெள்ளை - வரிக்கோடுகள்  கொண்டும், குறைந்து  விதை அமைப்பு கொண்டும் காணப்படும்.
 
                - எதிர்ப்புசக்தி  கொண்ட செடி மட்டும் நோய்க்கான அறிகுறிகளை தோற்றுவிக்கின்றன. ஆனால் செடியின் மகசூலில்  பாதிப்பு ஏற்படுத்தவதில்லை.
 
               
              கட்டுப்பாடு:              
                - அசைல்அலனின்  பூசணக்கொல்லியான மெட்டாலக்சில் 6 கிராம் கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும்.
 
                - இந்நோயினால்  பாதிக்கப்பட்ட செடிகளை அறிகுறிகள் தெரிந்தவுடன் பிடுங்கி எறியவும்.
 
                - விதைகளை  ஆப்ரான் 35 டபிள்யூ பி 2.5 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம்.
 
                - நோய்  எதிர்ப்பு இரகங்கள் _ கோ எச்(எம்) 5, இன்டிமிட், 345, இஹெச், 43861, கேஹெச்-526, ஏஹச்  - 36.
 
                - மெட்டாலக்சில்  1 கிராம் / லிட்டர் மெட்டாலக்சில் + மேங்கோசெப் 2.5 கிராம் / லிட்டர் என்ற அளவில்  தெளிக்கலாம்.
 
                | 
             
              
              
                  | 
                  | 
               
              
                | Healthy leaf with tassel | 
                Tassel turn into floral part | 
               
             
               |