துரு நோய் :  பக்ஸினியா சொர்கி   | 
          
          
            அறிகுறிகள்:  
              
                - வட்ட வடிவ பருப் போன்ற துகள்கள் ஆங்காங்கே இலையின் மேல் தோன்றும் மற்றும் பயிர் முதிர்ச்சி அடையும் போது, துகள்கள் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் மாறும்.  
 
                - யூரிடோ வித்துக்களும், டீலியோ வித்துக்களும் தோன்றும்.
 
               
              சாதகமான சூழ்நிலை  
              
                - குறைந்த தட்பவெட்பம் 10 - 12 டிகிரி செல்சியஸ் டிலியோ வித்துக்கள் முளைக்க ஏற்ற வெப்பநிலை.
 
                | 
            
              
                  | 
                  | 
               
              
                | இலையில் பழுப்பு கட்டிகள்  | 
               
              | 
          
          
            கட்டுப்பாடு: 
              
                -  மாற்று ஊண் வழங்கியை அழித்தல் .
 
                -  சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். 
 
                -  மான்கொசெப் 1.25 கிலோ /எக்டர் தெளித்தல்.
 
              |