| பயிர் பாதுகாப்பு :: மக்கா சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
           
         
     
        
          
            | இலைக்கருகல்: ஹெல்மின்தோஸ்போரியம் டர்சிகம், ஹெல்மின்தோஸ்போரியம் மெய்டிஸ் | 
           
          
            அறிகுறிகள் :  
              
                - இளம் பயிரையே தாக்கக் கூடியது.  
 
                - சிறிய மஞ்சள் நிறமான வட்ட (அ) முட்டை வடிவ புள்ளிகள் இலைகளில் தோன்றும்.  
 
                - நாளடைவில் இப்புள்ளிகள், நடுவில் வைக்கோல் நிறத்திலும், பழுப்பு நிறமான விளிம்புடன், நீள்வட்ட வடிவ புள்ளிகளாக விரிவடையும்.  
 
                - நாளடைவில் கருகி காணப்படும்.  
 
                - புள்ளிகளின் மீது பசுமை கலந்த ஆலிவ் நிறத்தில் பஞ்சு போன்ற கொனியா மற்றும் கொனிடியா தண்டுகள் காணப்படும்.
 
               
              சாதகமான சூழ்நிலை 
              
                - சாதகமான  தட்பவெட்பம்  8 - 27 டிகிரி  செல்சியஸ்  டிலியோ  வித்துக்கள்  முளைக்க  ஏற்ற  வெப்பநிலை.
 
               
 | 
            
                
                    | 
                    | 
                 
                
                  | நீள் வட்டப்புள்ளிகள்  | 
                 
               
             | 
           
          
            மேலாண்மை 
              
                - அடிச்சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை அறிகுறிகள் தெரிந்தவுடன் பிடுங்கி அழிக்கவும்.
 
                - நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான சார்டாஸ், டெக்கான் 105, ட்ரிசுலேட்டா, டெக்கான் 109, பயிரிடலாம்.
 
                - மெய்டிஸ் கருகல் நோய்க்கு, நோய் எதிர்ப்புத்திறன் இரகங்களான டெக்கான், விஎல் 42, பிரபாத், கேஹச்.5901, ஈபி ஆர் ஓ – 324, 339, ஐசிஐ – 701, எஃப்  – 701, எஃப்-  7012, சார்டஸ்,  டெக்கான் 109, கோ ஹச் 6 பயிரிடலாம்.
 
                -  சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். 
 
                - மெட்டாக்சில் @ 1000 கி / ஹெக்டர் மேங்கோசெம் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் அறிகுறி தென்பட்டவுடன் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
 
              | 
           
               
  |