| பயிர் பாதுகாப்பு  :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | கதிர் நாவாய் பூச்சி:  கலோக்கோரிஸ் அங்கஸ்டேடஸ் | 
               
              
                தாக்குதலின் அறிகுறிகள்:
                  
                    - குஞ்சுகளும்,      வளர்ந்த பூச்சியும் கதிர் பால்பிடிக்கும் தருணத்தில் சாறை உறிஞ்சுகிறது
 
                    - பாதிக்கப்பட்ட      கதிர் பால் பிடிக்காமல் சுருங்கி பழுப்பு நிறத்தில் இருக்கும்
 
                    - குஞ்சுகள்      ஆரஞ்சு மற்றும் வெளிரிய பச்சை நிறமாகவும், தாய்பூச்சியுடன் கதிர்களில் காணப்படும்
 
                   
                  பூச்சியின் விபரம்: 
                  
                    - முட்டை: உருண்டையாக நீல      நிறத்தில் இருக்கும்
 
                    - குஞ்சுள்: ஒடுங்கியும்,      பச்சை நிறமாகவும் காணப்படும்
 
                    - தாய்ப்பூச்சி: ஆண் தாய்ப்பூச்சி      பச்சை நிறமாகவும், பெண்தாய்ப்பூச்சி பச்சை நிறமாகவும், ஓரத்தில் பழுப்பு நிறமாகவும்      காணப்படும்
 
                   
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  
                    - கீழ்காணும் ஏதாவது ஒரு மருந்தினை கதிர் வரும் தருவாயில் மூன்றாவது மற்றும் பதினெட்டாவது நாளில் தெளிக்கவும்
                      
                        - கார்பரில்       10 D 25 கிலோ/ஹெக்டேர்
 
                       
                     
                    
                      - மாலத்தியான்       5 D 25 கிலோ/ஹெக்டேர்
 
                      - பாசலோன்       4 D 25 கிலோ/ஹெக்டேர்
 
                      - வேப்பம்       கொட்டை வடிநீர் 5 சதவீதம்
 
                      - அசடிராக்டின்       1 சதவீதம்
 
                     
                    | 
                  
                  
                  
                    
                        | 
                     
                    
                      | தாய்ப்பூச்சி | 
                     
                  
                  | 
               
              | 
           
       
  |