பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர் துளைப்பான்: ஹெலிகோவெர்பா ஆர்மீஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு கதிரை துளைத்து உள்ளே சென்று தின்று சேதம் விளைவிக்கும். புழுவின் சேதக்கழிவுகள் தாக்கப்பட்ட பகுதியில் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: உருண்டை வடிவமாக வெள்ளை நிறத்தில் இருக்கும்
  • புழு: பச்சை கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்.  உடலின் மேற்பரப்பில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறக்கோடுகள் காணப்படும்.
  • கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில் இலை, காய் மற்றும் மண்ணினுள் காணப்படும்
  • அந்துப்பூச்சி: பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.  முன் இறக்கை பச்சை கலந்த பழுப்பு நிறத்திலும், பின் இறக்கை வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • விளக்கு பொறி அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்
  • இனக்கவர்ச்சி பொறி 12/ஹெக்டேர் என்ற எண்ணிக்கையில் அமைத்து ஆண் அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • என்.பி.வி @1.5x1012 POB + நாட்டுச் சர்க்கலை 2.5 கி.கி + பருத்தி விதை பொடி 250 கி என்ற அளவில் கலந்து மக்காச்சோள கதிர்களில் படும்படியாக இரண்டு முறை வீதம் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்
  • கதிர் வெளிவந்த 18 நாட்களுக்கு பிறகு கீழ்காணும் மருந்தினுள் ஏதேனும் ஒன்றினைத் தூவி அந்துப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்
    • கார்பரில் 10 D 25 கிலோ
    • மாலத்தியான் 5 D 25 கிலோ
    • பாசலோன் 4 D 25 கிலோ

புழு

இளம் பூச்சி
முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015