பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத்துளைப்பான்: கைலோ பார்டெலஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு தண்டினைத் துளைத்து உள்ளே சென்று பகுதியைத் தின்று சேதம் விளைவிக்கும்
  • இளம் பயிரில் இப்பூச்சியினால் தாக்குதல் ஏற்பட்டால் நடுக்குருத்து காய்ந்துவிடும்
  • வளரும் பயிரிலிருந்து வெளிவரும் இலைகளின் இரண்டு பகுதியிலும் சம அளவில் துவாரங்கள் இருக்கும்

பூச்சியின் விபரம்:

  • புழு: புழுக்கள் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  தலை பழுப்பு நிறத்துடன் காணப்படும்
  • அந்துப்பூச்சி: தாய் அந்துப்பூச்சி பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி குருணைகளை மணலுடன் (50 கிலோ) கலந்து விதைத்ததிலிருந்து 20 நாட்கள் கழித்து இலைகளில் படும்படியாக தூவ வேண்டும்
    • போரேட் 10 G 8 கிலோ
    • கார்பரில் 4% G 20 கிலோ
  • தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணி ட்ரைகோகர்மா கைலோனிஸ் 2,50,000 என்ற எண்ணிக்கையில் மூன்று முறை ஒரு வார இடைவெளியில் வயலில் விடவும் மற்றும் மூன்றாவது முறையில் புழு ஒட்டுண்ணி கோட்டிசா பேலிவிபஸ் 5,000 என்ற எண்ணிக்கையில் விடவும்.
  • பூச்சிக்கொல்லி குருணைகளை பயன்படுத்தாதபொழுது பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிச் கொல்லியைத் தெளிக்கவும்
    • கார்பரில் 50 WP 1 கிலோ
    • டைமிதோயேட் 30% EC 660 மி.லி/ஹெக்டேர்
இலைகளில் துவாரங்கள் துளைக் குழி காய்ந்த நடுக்குருத்து

கூட்டுப்புழு மற்றும் புழு அந்துப்பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015