பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குருத்து பூச்சி: பெரிகிரென்ஸ் மெய்டிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • தாக்கப்பட்ட பயிர்கள் மஞ்சள் நிறமாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்
  • தாக்கப்பட்ட பயிர்களில் இலைகள் மேலிருந்து கீழாக உதிரும்
  • கதிர் பிடித்தல் இருக்காது மற்றும் தாக்குதல் தீவிரமாக இருந்தால் பயிர்கள் காய்ந்துவிடும்
  • இலைகளில் கருமையான பூசணத்தினால் மூடப்பட்டிருக்கும்
பூச்சியின் விபரம்:
  • முட்டை: இலையின் திசுகளின் உள்ளே முட்டைகள் இட்டு வெள்ளை நிற மெழுகால் மூடப்பட்டிருக்கும்
  • தாய்ப்பூச்சி: இறக்கைகள் ஒளி ஊடுருவக்கூடியதாகவும், கரும் பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • கீழ்வரும் பூச்சி மருந்தினுள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
    • டையசின் 0.04 சதவிகிதம்
    • டைமிதோயேட் 0.02 சதவிகிதம்
    • ஒரு ஹெக்டருக்கு பாஸ்பாமிடான் 250 மி.லி /450-500 லி நீர

முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015