பயிர் பாதுகாப்பு :: மக்காச்சோள பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குருத்து ஈ : அதெரிகோனா ஓரியன்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவரும் காலற்ற புழுக்கள் இலையுறைக்கும், தண்டிற்கும் இடையே குடைந்து சென்று நடுக்குருத்தை தாக்குகிறது. இதனால் நடுக்குருத்து அழுகிவிடும்

பூச்சியின் விபரம்:

  • குருத்து ஈ: சிறியதாக சாம்பல் நிறத்தில் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • பூச்சி மருந்தினால் விதைமுலாம் பூசப்பட்ட விதைகளை பயன்படுத்தவேண்டும்
  • ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் இமிடாகுளோபிரிட் 70 WS என்ற வீதம் விதை நேர்த்தி செய்து விதைகளை விதைக்க வேண்டும்
  • அறுவடை செய்த உடனே சோளத் தட்டைகளை அகற்றியபின் உழுதுவிடவேண்டும்
  • குறைந்த விலை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக மீன் இறைச்சிப் பொறியினை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைத்து குருத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம்
  • கீழ்காணும் ஏதேனும் ஓர் மருந்தினை தெளிக்கவேண்டும்
    • மெத்தில் டெமட்டான் 25 EC 500 மி.லி/ஹெக்டேர்
    • கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டேர்
    • டைமீதோயேட் 30 EC 500 மி.லி/ஹெக்டேர்
    • மெத்தில் டெமட்டான் 25 EC 1000 மி.லி/ஹெக்டேர்
    • போரேட் 10% CG 10 கி.கி/ஹெக்டேர்
காய்ந்த நடுக்குருத்து
முதிர் பூச்சி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015