இலைப்பேன்:  திரிப்ஸ் ஸிம்பிளக்ஸ் 
                 
              அறிகுறிகள்: 
              
                - லில்லி  பூக்கள், குமிழ்கள் உருமாறி, நிறம் மாறியிருக்கும்.
 
                - பூக்கள்  மற்றும் மொட்டுக்கள் மூடியிருக்கும் (அ) ஒழுங்கற்ற முறையில் திறந்திருக்கும்.
 
                - தாக்கப்பட்ட  பரப்புக்கள் எப்பொழுதும் போல் பளபளப்பாக இல்லாமல், வெள்ளை கலந்த சாம்பல் நிறத்தில்  காணப்படும்.
 
               
பூச்சியின்  விபரம்: 
              
                - முட்டை  – வெள்ளை நிறத்தில், மென்மையாக, பீன்ஸ் வடிவத்தில் இலை திசுக்கள் மற்றும் கிழங்குகளில்  படிந்திருக்கும்.
 
                - பூச்சி  – பால் – வெள்ளை நிறத்தில், தோன்றி பின் பழுப்பு நிறமாக மாறும்.
 
                - இறக்கைகளின்  அடிப்புறத்தில் மாறுப்பட்ட வரிகள் இருக்கும்.
 
               
கட்டுப்பாடு: 
              
                - பூக்கள்  உருவாகும் சமயத்தில் மீத்தைல் பாரத்தியான் 1 மிலி  தெளித்தல்.
 
                - கிழங்குகளை  லிண்டேன் மருந்தை சேமிப்பதற்கு முன் தூவி நேர்த்தி செய்ய வேண்டும்.
 
                - மோனோகுரோட்டாபாஸ்  உடன் நேர்த்தி செய்து 190° செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவாக வைத்து சேமித்தல்.
 
                - தாக்கப்பட்ட  குமிழ்களை மீத்தைல் ப்ரோமைடு உடன் புகையூட்டம் செய்தல் (அ) சுடு நீரில் 43.9° செல்சியஸ் வெப்பநிலையில் முக்கி  எடுக்க வேண்டும்.
 
                - திம்மிட் 4-10 கிலோ/ஹெக்டர் மண் அளிப்பு செய்தல்
 
                | 
             |