| பயிர் பாதுகாப்பு  :: அவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
       
        
          
            
              
                
                  
                     வெள்ளை  ஈ : பெமிசியா டேபேசி  | 
                     
                    | 
               
              
                அறிகுறிகள் 
                  
                    - இலைகள் பல்வண்ண நிறமாக மாறும் மஞ்சள் நிறத்தில் காணப்படும்
 
                    - மஞ்சள் பல்வண்ண நச்சுயிரியின் நோய் பரப்பும் கிருமியாக உள்ளது
 
                     
                   பூச்சியன் விபரம் 
                  
                    - தாய்ப்பூச்சிகள் : சிறியதாக, மஞ்சள் நிற உடலுடன் வெள்ளை நிற       இறக்கைகளுடன், உடலைச் சுற்றிலும் மெழுகுப் போன்ற பொடியுடன் காணப்படும்
 
                    - இளம்பூச்சிகள்       மற்றும் கூட்டுப்புழு கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருக்கும்.       கூட்டுப்புழுவில் விளிம்பில் நிறைய ரோமங்களுடன் காணப்படும்                      
 
                     
                  
                  கட்டுப்பாடு 
                  
                    - எண்ணெய் மற்றும் நீர் கலந்த பாத்திரம்  அல்லது எண்ணெய் தேய்த்த துணியை செடியின் கீழே வைத்து, செடியை உலுக்கவேண்டும்
 
                    - மித்தைல் டெமட்டான் 25 இசி. 500 மி.லி.  அல்லது டைமெத்தயோயேட் 30 இ.சி. 500 மி.லி. அல்லது பாஸ்போமிடான் 85 WSC 250 மி.லி.  எக்டர் தெளிக்க வேண்டும்.
 
                  | 
                 
            | 
           
         
  |