பழம்  அழுகல்: ரைசோபஸ் ஆர்ட்டோகார்பி, ரைசோபஸ் நிக்ரிகன்ஸ் மற்றும் பைட்டோப்தோரா பால்மிவோரா 
             
              அறிகுறிகள் 
              
                
                  - இளம்       பழங்கள் மற்றும் ஆண் பூங்கொத்துக்களை பூசணங்கள் மிக மோசமாக தாக்கப்படுவதால்       குறைந்த சதவிதமே பழங்கள் முதிர்ச்சியடைகின்றன
 
                  - பொதுவாக       பெண் பூங்கொத்து மற்றும் முதிர்ந்த பழங்களுக்கு நோய் தாக்குதல் ஏற்படாது
 
                  - இந்நோய்       மென்மை அழுகல் நோயாகும். ஆரம்ப காலத்தில் பூசணங்கள் சாம்பல் நிறமாக அதிகப்படியான       பூசண இழைகளுடன் வளர்ந்து படிப்படியாக கருப்பு நிறமாக வளர்ந்து காணப்படும்
 
                  - பூசணம்       படிப்படியாக வளர்ந்து பழம் முழுவதும் அல்லது பூங்கொத்து முழுவதையும் தாக்கி அவை       அழுக நேரிடும். பின் உதிர்ந்து விடும்
 
                 
               
              கட்டுப்பாடு 
              
                
                  - ஜனவரி,       பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மூன்று வார கால இடைவெளியில் 0.25% மேன்கோசெப்       அல்லது 0.25% காப்பர் ஆக்ஸில்க்ளோரைடை இளம் பழங்களின் மேல் தெளிக்கவும்
 
                 
               
               | 
              
                
               |