| பயிர் பாதுகாப்பு  :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  1. குருத்து இலைப்பிணைக்கும் புழு: ஆண்டிகேஸ்ட்டிரா கேட்டாலூனாலிஸ்  | 
                 
                
                  
                    
                      தாக்குதலின் அறிகுறிகள் 
                        
                          - இளம் புழு இலையைப் பிண்ணி      பிணைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்.
 
                          - வளர்ச்சியடைந்த புழு      மொக்கு மற்றும் காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்
 
                           
                          
பூச்சியின் விபரம் 
                        
                          - புழு: இளம் பச்சை நிறத்திலிருக்கும்,      தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற ரோமங்கள் காணப்படும்
 
                          - அந்துப்பூச்சி:  அந்துப்பூச்சி      மிகவும் சிறியது, இளம் சிகப்பு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும்.
 
                         
                        கட்டுபடுத்தும் முறை : 
                        
                          - வேப்ப எண்ணெய் 0.03% என்ற அளவில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
 
                          - பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
 
                          
                            - கார்ப்ரைல் 50 WP 1000 கி/எக்கடர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
 
                            - வேப்பங் கொட்டை சாறு (5%)
 
                            - வேப்ப எண்ணெய் (இரண்டு முறை) 2%
 
                           
                          - தொடர்ந்து ஒரே வகையான பூச்சிக்கொல்லியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
 
                          | 
                        
                         
  | 
                     
                    | 
                 
                | 
           
         
         
 |