வெள்ளை ஈ: அலிரோடைக்கஸ் டிஸ்பர்சஸ் 
                சேத்தின்  அறிகுறி: 
            
              - குஞ்சுகளும் தாய்ப்பூச்சிகளும் இலைகளில்  உள்ள சாற்றை உறிஞ்சும்.
 
              - பூச்சிகளின் தேன் போன்ற கழிவுப் பொருளின்  படிவால் இலை மற்றும் பூங்கொத்துக்களில் கருமையான பூசணம் வளரும்.
 
              - இலைகள் மஞ்சளாக மாறும்.
 
              - தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்.
 
           
பூச்சியின்  விவரம்: 
            
              - சிறு வெண்ணிற பூச்சிகள் இலைகளில் அடை  அடையாக மாவுப்பூச்சிகளைப் போன்று காணப்படும். அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படும்
 
             
கட்டுப்படுத்தும்  முறை: 
            
              - வயலை சுத்தமாக வைக்க வேண்டும்.
 
              - களைகளை அகற்ற வேண்டும்.
 
              - மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி வைத்து பூச்சிகளை  கவர்ந்து அழிக்கலாம்.
 
              - தாக்குதல் அதிகமாக இருந்தால் இமிடாகுளோப்ரிட்  200 எஸ்.எல் 0.01 சதவீதம் (அ) ட்ரை அசோபாஸ் 40 இ.சி. 0.06 சதவிதம் தெளிக்கலாம்.
 
              - வேப்ப எண்ணெய் 3 சதவிதம் அல்லது வேப்பங்கொட்டை  சாறு 5 சதவிதம் தெளிக்கலாம்.
 
              - கிரிப்டோலேமஸ் மாண்டரொஸரி பொறிவண்டை  விட்டு கட்டுப்படுத்தலாம்.
 
              - என்கார்சியா ஷெய்டெரிஸ், என்கார்சியா  காடெல்பே ஆகிய ஒட்டுண்ணிகளை விடலாம்.            
 
              | 
            
              
  | 
              |