| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | அசுவினி: ஏபிஸ் கிராசிவோரா | 
               
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்: 
                      
                        - குஞ்சுகளும், வளர்ந்த      பூச்சியும் இலைகள் மற்றும் குருத்துக்களின் சாறை உறிஞ்சுகிறது
 
                        - தாக்கப்பட்ட பயிர்களில்      இலைகள் மற்றும் தண்டுகள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்
 
                        - குஞ்சுகள் தேன் போன்ற      கழிவுத் திரவத்தை இலைகளின் மேற்புறத்தில் சுரக்க செய்கின்றது
 
                        - தாக்கப்பட்ட இலைகள்      கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமையாக மாறி காய்ந்து விடுகிறது
 
                        - இப்பூச்சியின் தாக்குதலால்,      நிலக்கடலை ரோஜா இதழுக்கு வைரஸ் நோய் பரவுகிறது
 
                       
                      பூச்சியின் அடையாளம்: 
                      
                        - அசுவினி: பூச்சியானது சிகப்பு நிறத்தில் காணப்படும் ,அதன் வயிற்றுப் பகுதியில் கனுக்கள் காணப்படும்
 
                       
                      கட்டுப்படுத்தும் முறை:                         
                      
                          - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
                          
 
                        
                          - குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்
 
                              - இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்
 
                              - மீத்தைல்திமத்தான் 25% EC 1000 மி.லி /ஹெக்டேர்
 
                           
                        | 
                     
  | 
                     
                  
                      
                       | 
                   
                    | 
                 
          | 
           
         
         
 |