பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
புகையிலை வெட்டுப்புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முட்டையிலிருந்து வெளிவரும் இளம்புழு இலையைத் தொடர்ச்சியாக உண்டு சேதப்படுத்தும்
  • புழு இலையின் பச்சையத்தைச் சுரண்டி உண்ணும்

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: முட்டைக்குவியல்களாக பழுப்பு நிறத்திலிருக்கும்
  • புழு: இளம் பச்சைநிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் கருமைநிறக் கோடுகள் காணப்படும்
  • அந்துப்பூச்சி: பழுப்புநிறத்தில் இருக்கும். முன் இறக்கையில் வெள்ளை நிறக்கோடும், பின் இறக்கையில் பழுப்புநிறக் கோடும் காணப்படும்.

Groundnut

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை: 8 முட்டை கூட்டம்/100  மிட்டர் வரிசை
  • ஆமணக்கு பொறிப் பயிராக நடவு செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டையை ஆமணக்கு மற்றும் சூரியகாந்தி இலைகளின் மேற்புறத்தில் இடும்.
  • விளக்குப் பொறி அமைத்து அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்
    முட்டை குவியலையும் புழுக்களையும் கைகலால் சேகரித்து அழிக்கலாம்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • கார்ப்ரைல் 50 WP 2.0 கி.கி/ஹெக்டேர்
    • குயின்லாபாஸ் 25 EC 750 மி.லி /ஹெக்டேர்
    • டைகுளோரோவாஸ் 76 WSC 750 மி.லி /ஹெக்டேர்
    • டைபுளுபெச்சுரான் 25 WP 300-400 கி/ஹெக்டேர்
  • வேப்ப எண்ணெய் 2% 20 லி/ஹெக்டேர்
  • நஞ்சு உணவு (அரிசித்தவுடு 12.5 கி.கி +பனங்கட்டி 1.25 கி.கி+கார்பரைல் 1.25கி.கி +தண்ணீர் 7 லி )அமைத்து வளர்ச்சியடைந்த புழுவை கட்டுப்படுத்தலாம்.
  • நீயுக்ளியார் பாலிஹெட்ரோசிஸ் வைரஸை (3X1012 POB/ha) பயன்படுத்தி காய் புழுவினை அழிக்கலாம்
    ஊடு பயிராக அவரை + நிலக்கடலை- 1:4 விகிதத்தில் பயிர் செய்து பூழுக்களின் தாகுத்தலை கட்டுப்படுத்தலாம்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளித்து வளர்ச்சியடைந்த புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
    • இமிடாகுளோபிரிட் 17.8% SL100-125 மி.லி /ஹெக்டேர்
    • குயின்லாபாஸ் 25% EC 1400 மி.லி /ஹெக்டேர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015