தாக்குதலின் அறிகுறிகள்: 
                      
                        - புழுவானது      இலை, மொட்டு மற்றும் மலர்களை உண்டு சேதப்படுத்தும்
 
                        - புழு      மொக்குகளில் ஊடுருவி சென்று, திசுவை உண்ணுகிறது
 
                       
                      பூச்சியின் அடையாளம்: 
                      
                        - முட்டை: பெண் அந்துப்பூச்சி      மஞ்சள் நிற முட்டைகளை தனித்தனியே இலையின் மேற்பகுதியில் இடுகின்றது
 
                        - புழு: முட்டையிலிருந்து      வெளிவரும் புழு பச்சை அல்லது பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்
 
                        - அந்துப்பூச்சி: அந்துப்பூச்சியின்      பழுப்புநிற முன் இறக்கையில் V - வடிவக் கோடு இருக்கும். பின் இறக்கையின் ஓரப்பகுதி      அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்
 
                        | 
                      
                       
  | 
                     
                   
கட்டுப்படுத்தும் முறைகள்: 
                  
                    - கோடைக்காலங்களில்      நிலத்தை ஆழமாக உழுதல் வேண்டும்
 
                    - ஊடுபயிராக தட்டைபயிரை      5 அல்லது 6 வரிசைகளுக்கு இடையில் பயிர் செய்தால் பெண் அந்துப்பூச்சி முட்டைகளை      தட்டைப்பயிரில் இடும். பின்னர் முட்டைகளை சேகரித்து அழிக்கலாம்.
 
                    - இனக்கவர்ச்சிப்      பொறியை எக்டர்க்கு 5 வீதம் அமைத்து ஆண் அந்துப்பூச்சியைக் கவர்ந்து அழிக்கலாம்.
 
                    - முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரைமா கைலானிஸ் எக்டர்க்கு      1 லட்சம் (அ) கிரைசோபெர்லா கார்னியாவை எக்டர்க்கு 50,000 வீதம் நட்ட 50 நாட்களுக்கு      பிறகு வெளியிட்டு காய்த்துளைப்பானை நன்குக் கட்டுப்படுத்தலாம்.
 
                   
                  
                    - இயற்கை எதிரிகளான சிலந்தி பூச்சி,வெட்டுகிளி,எறும்புகள், தட்டான் ,பொறி வண்டுகள் ,பரக்கானிட் cட்டுண்ணி மற்றும் மஸ்கடைன் பூச்சை இவற்றை கொண்டு ரோமப்புழுவை கட்டுப்படுத்தலாம்.
 
                    - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
 
                   
                  
                    
                      - குயினால்பாஸ்       2மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்
 
                      - குளோர்பைரிபாஸ்       3 மிலி 1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்
 
                      - இமிடாகுளோபிரிட் 2 மி.லி1 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும் 
 
                     
                    |