| பயிர் பாதுகாப்பு  :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | வெள்ளைப்புழு: கோலோட்ரைக்கியா செரோட்டா | 
                 
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்:
                      
                        - புழு வேர்களையும், காய்களையும்      உண்டு சேதப்படுத்தும்
 
                        - தாக்கப்பட்ட செடிகள்      காய்ந்து மடிந்துவிடும்
 
                       
                      பூச்சியின் அடையாளம்: 
                      
                        - முட்டை: உருண்டையாகவும், வெள்ளை      நிறத்திலும் இருக்கும்
 
                        - புழு: புழு வெள்ளைக்      கலந்த மஞ்சள் நிறமாகவும், C வடிவிலும் இருக்கும்
 
                         
                      கட்டுப்படுத்தும் முறை: 
                      
                        - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
                          
                            - கார்போபியுரான் 3% CG 33.3 கி.கி/ஹெக்டேர்
 
                            - குளோரோபைரிபாஸ் 20% EC 1000 மி.லி /ஹெக்டேர்
 
                            - போரேட் 10 CG 25 கி.கி/ஹெக்டேர்
 
                           
                         
                        | 
                      
                        
                       
  | 
                     
                    | 
                 
            | 
           
         
         
 |