பயிர் பாதுகாப்பு :: நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கரையான்: ஓடோனோடெர்மஸ் ஒபிசஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து விடும்
  • கரையான் வேரினுள் நுழைந்து உட்சென்று உண்ணுகிறது
  • காய்களில் சிறியத்துளைகள் காணப்படும்

பூச்சியின்அடையாளம்:

  • கரையான் கூட்டமாக புற்றுக்குள் வாழும்.இதில் வேலைக்கார கரையான் ராஜா,ராணி கரையான் என மூன்று வகை காணப்படும்
  • வேலைக்காரகரையான்: சிறியதாகவும்,மென்மைானஉடலையும், புழுப்பு நிற தலையையும் கொண்டு சுமார் 4மில்லி மீட்டர் அளவு இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
  • கடப்பாரைக் கொண்டு கரையான் புற்றை கொத்தி அகற்ற வேண்டும்
  • நன்கு மக்கிய இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்
  • இடைச்சாகுபடி முறைகளை தொடர்ச்சியாக கையாள்வதன் மூலம் கரையான் பாதிப்பைத் தவிர்க்கலாம்
  • குளோரோபைரிபாஸ் 20 EC  
  • விதை நடவுக்கு முன்பாக குளோர்பைரிபாஸ் தூளை ஹெக்டர்க்கு 30-40 கிலோ வீதம் தூவி கரையானைக் கட்டுப்படுத்தலாம்
  • விதை நேர்த்தி செய்த நிலக்கடலை விதைக்க வேண்டும் (1 கிலோ நிலக்கடலை + 6.5 மிலி குளோர்பைரிபாஸ்)

Groundnut


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015